Aran Sei

`செம்பரம்பாக்கம் குறித்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை’ – தமிழ் நாடு வெதெர்மேன்

2015 ஆம் ஆண்டு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் பெய்த தொடர் மழையால் செம்பரம்பாக்கம் நீர்த் தேக்க கரை உடைந்து பெரும் சேதத்தை உண்டாக்கியது. தற்போது பெய்து வரும் மழை கடந்த காலத்தை நினைவுபடுத்துகிறது. மீண்டும் கரை உடைந்து வெள்ள அபாயம் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதெர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய முகநூல் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். செம்பரம்பாக்கம் குறித்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை. இன்னும் தொடர்ந்து மழை பெய்தாலும் 1 டிஎம்சி கொள்ளளவு நீரைத் தேக்கிவைக்க முடியும். வெள்ளம் குறித்துத் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்று கூறியுள்ளார்.

( படம்: .நவம்பர் மாதம் 13 ஆம் நாள் வரை சென்னையைச் சுற்றியுள்ள நீர்த் தேக்கங்களில் மொத்தக் கொள்ளளவு )

 

“செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் வட கிழக்குப் பருவமழையால் நிறைந்தாலும் வெள்ள அபாயம் ஏற்படுத்தாமலே பல ஆண்டுகள் கடந்திருக்கின்றன. அதேபோல், அடையார் நதிக்கரைகளில் உடைப்பு ஏற்படுத்தாமலே நீரை வெளியேற்றும். அதிகபட்ச வெள்ளம் வரும்போது மட்டும்தான் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு சேதம் விளைவிக்கும். 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப் போல், இப்போதும் நிகழுமோ என்கிற உங்களின் அச்சத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஒவ்வொரு நிகழ்வையும் 2015 வெள்ளத்துடன் ஒப்பிட வேண்டியதில்லை. எனவே நிம்மதியாகத் தூங்குங்கள். இந்த மழை பாதிப்பில்லாதது” என்று தமிழ் நாடு வெதெர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகியவற்றின் மேற்குப் பகுதியில் ஏராளமாக நல்ல மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

தூத்துக்குடி மாவட்டத்தில் 150 mm மழை பதிவாகியுள்ளது. பல மாதங்களாக மழையின்றித் தவித்து வந்த மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்னும் இரண்டு நாட்களில் செங்கல்பட்டைச் சுற்றியுள்ள இடங்களில் 200mm அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தமிழ்நாடு வெதெர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்