Aran Sei

 ’மருத்துவச் சேர்க்கைக்கு நீட்டை நிச்சயம் ஏற்க முடியாது’ – ஒன்றிய அரசிடம் வாதிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர்

ன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டுமென இந்திய ஒன்றிய அரசு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் இறுதி தேர்வுகுறித்து நடத்திய கூட்டத்தில்  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறாது என்றும் கூறியுள்ளார்.

‘மம்தா திதி, பாஜகவில் இணைந்தது தவறுதான்; எங்களை மன்னியுங்கள்’ – திரிணாமூல் காங்கிரஸுக்கு திரும்பும் பாஜகவினர்

நேற்று மே 23 அன்று சி.பி.எஸ்.இ கல்வி முறையில் செயல்படும் பள்ளிகளில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் இறுதி தேர்வுகுறித்து நடந்த அனைத்து மாநில முதல்வர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் பங்கேற்று தமிழகத்தின்
நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தனர்.

மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு தேர்வு குறித்தும், அதன் பிறகு மாணவர்கள் எதிர்கொள்ளும் தேர்வுகள் குறித்தும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

‘ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்தும் தி பேம்லி மேன் 2 இந்தித் தொடரை தடை செய்க’ – ஒன்றிய அரசுக்கு வைகோ கடிதம்

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கை 12ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும், தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்திற்கு தனியே நீட் தேர்வு நடத்தவிருப்பதாக ஊடங்கங்களில் பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெரும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமுமில்லை என்று கூறியுள்ளதாகவும் அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

source;செய்தி வெளியிட்டு எண்;143, இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத்துறை 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்