Aran Sei

NO MEANS NO – ஏன் இது ஆண்களுக்கு புரியவில்லை ? – வன்புணர்வு வழக்கில் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம் கேள்வி

credits : The hindu

17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ள இமாச்சல் பிரதேச உயர் நீதிமன்றம், உடலுறவுக்கு ஒரு பெண் விருப்பமில்லாமல் வேண்டாம் என்று கூறினாலும் ஏன் பெரும்பாலான ஆணுக்கு இதை க்ல்ல்புரிந்து கொள்ள மிக கடினமான ஒன்றாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி 17 வயது சிறுமி ஒருவர் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவ்வழியே ஜீப்பில் வந்த ஆண் ஒருவர் அந்த பெண்ணை வீட்டில் விட்டுவிடுவதாக கூறி அழைத்துள்ளார். அந்த ஆண் முன் கூட்டியே பரிச்சயமானவர் என்பதால், சிறுமியும் அவருடன் உடன் சென்றுள்ளார்.

சிறுமி அவருடைய வாகனத்தில் ஏறிய பிறகு அவர் அந்த சிறுமியை வீட்டில் விடாமல், ஆள் அரவமற்ற தனியான இடத்துக்கு கூட்டிச் சென்று அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்த ஆண் தன்னை திருமணம் செய்யக் கோரி வற்புறுத்தியதற்கு மறுப்பு தெரிவித்தும், பலவந்தமாக அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, சாலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கங்காசாகர் மேளா – ‘மத நம்பிக்கைகளை விட உயிர் தான் முக்கியம்’ : கொல்கத்தா உயர் நீதிமன்றம்

இதையடுத்து வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண் தன் குடும்ப உறுப்பினர்களிடம் நடந்த சம்பவத்தை விளக்கி, அந்த நபர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த மறுநாள் (டிசம்பர் 18 ஆம் தேதி) அந்தப் ஆண் கைது செய்யப்பட்டார்.

எத்தனை முறை சொல்வது – “திருமணத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை” – அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்

இந்நிலையில் அந்த ஆண், ஜாமீன் கோரி இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அணுப் சிட்காரா, ”அந்த பெண் வேண்டாம என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, வேண்டாம் என்றால் வேண்டாம் (NO MEANS NO) என்று தான் அர்த்தம் – இந்த சாதரணமான வாக்கியத்தின் அர்த்தம், பெரும்பாலான ஆண்களுக்கு மிக கடினமான புரியாத ஒன்றாக உள்ளது. வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தம் இல்லை, வேண்டாம் என்றால் வெட்கப்படுகிறார் என்று அர்த்தம் இல்லை, வேண்டாம் என்றால் (என்னை) சமாதானபடுத்து என்று அர்த்தம் இல்லை, வேண்டாம் என்றால் தொடர்ந்து ஆக்கிரமியுங்கள் என்று அர்த்தம் இல்லை. வேண்டாம் என்கின்ற வார்த்தைக்கு வேறேதேனும் விளக்கமோ நியாயமோ தேவையில்லை. வேண்டாம் என்று கூறிவிட்டால் அது அங்கேயே முடிந்து விட்டது, சம்பந்தப்பட்ட ஆண் நிறுத்திக் கொள்ள வேண்டும்”. என்று தெரிவித்துள்ளதாக என்டிடிவி கூறுகிறது.

கடவுளை ‘அல்லாஹ்’ என அனைத்து மதத்தினரும் அழைக்கலாம்: மலேசியா உயர் நீதிமன்றம் உத்தரவு

குற்றவாளி அந்தச் சிறுமியை தொட்ட உடனேயே அவர் ”வேண்டாம்” என்று மறுத்திருக்கிறார், ஆனால் அந்த ஆண் தொடர்ந்து அத்துமீறியுள்ளார். இதில் எங்கும் ஒருமனதாக இருவரும் சேர்ந்து உடலுறவில் ஈடுபட்டோம் என்று தெரிவிக்கப்படவில்லை என கூறி, குற்றவாளியின் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்