Aran Sei

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் – இழப்பீட்டை மறுக்கும் ஜார்கண்ட் அரசு

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றால் ஊடகவியலாளர்கள் ஏற்பட்டதாக பதிவாகவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் 30க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சங்கம் ஒரு பட்டியலை அளித்திருக்கும் நிலையில், அரசின் இவ்வாறு கூறியுள்ளது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பந்து திர்கே எழுப்பிய கேள்வி ஜார்கண்ட் சுகாதார அமைச்சர் பானா குப்தா அளித்திருக்கும் பதிலில், “ ஊடகவியலாளர்கள் மரணத்தைப் பொறுத்தவரை, கொரோனாவால் உயிரிழந்ததாக எந்த தரவுகளும் இல்லை மற்றும் மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை அமைப்புகளும் பதிவுகள் இல்லை. எனவே, இழப்பீடு வழங்க எந்த ஏற்பாடும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் ஊடகவியலாளர்கள் சங்கம் தலைவர் ஷாநவாஸ் ஹாசன், “கொரோனா தொற்றால் குறைந்தபட்சம் 30 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள்கள் விவரங்களை மாவட்ட வாரியாக கடிதமாக மாநில முதலமைச்சர் மற்றும் மாநில மக்கள் தொடர்புத் துறைக்கு எழுதியுள்ளோம்” என கூறியுள்ளார்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஹரியாணா மற்றும் உத்திரபிரதேச மாநிலங்கள் உயிரிழந்த ஊடகவியலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், “சுகாதார அமைச்சர் முடிவை மாற்றியுள்ளார். இதற்கு என்ன காரணம் எனப் புரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மே 1 ஆம் தேதி, ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஊடகவியலாளர் சுனில் பஸ்வான் உயிரிழந்த சிறிது நேரத்தில், அவருக்குக் கொரோனா தொற்று இருந்த சான்றிதழை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனை வழங்கியிருந்தது. அதை அவரது குடும்பத்தினர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துடன் பகிர்ந்திருந்தனர்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் அமர் குமார் பௌரியின் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை, ”ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை” என தெரிவித்திருந்தது.

ஜுலை மாதத்தில், ஜார்கண்ட் உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் குப்தா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : Indian Express 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்