Aran Sei

‘டெல்லி தர்ம சன்சத் நிகழ்ச்சியில் வெறுப்பு பேச்சு இல்லை’ – உச்ச நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தகவல்

டெல்லியில் டிசம்பர் 19 தேதி நடைபெற்ற தர்ம சன்சத் கூட்டத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசப்படவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “காணொளி மற்றும் பிற ஆதரங்களை பற்றிய ஆழமான விசாரணையில், எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக வெறுப்பு பேச்சு பேசப்படவில்லை என்பது கண்டறிப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட அந்த காணொளியை பகுப்பாய்வு செய்தததில், அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளின் நிலை என்ன? – உச்சநீதிமன்றம் கேள்வி

விசாரணையில் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட அனைத்து புகார்களும் முடித்து வைக்கப்பட்டுவிட்டன என்று காவல்துறை கூறியுள்ளது.

மேலும் எதிர்மனுதாரர் முதலில் காவல்துறையை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன் என்று கேள்வியை டெல்லி காவல்துறை தனது பிரமாணப் பத்திரத்தில் எழுப்பியுள்ளது.

“வெறுப்பு பேச்சு பேசியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் காவல்துறை கைகோர்த்துள்ளது என்று காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக மனுதாரர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் கற்பனையானவை. இந்த வழக்கு காணொளியை அடிப்படையாக கொண்டது. இதில், ஆதாரத்தை அழிக்கவோ, விசாரணையை தடுக்கவோ புலனாய்வு அமைப்புகளுக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

‘தர்ம சன்சத் தொடர்பாக உத்தரக்கண்ட் பாஜக அரசின் நிலைப்பாடு என்ன?’ – உயர் நீதிமன்றம் கேள்வி

வெறுப்பு பேச்சு தொடர்பாக பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ், பத்திரிகையாளர் குர்பான் அலி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை  விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

Source: NDTV

அசிங்கப்பட்ட எச்.ராஜா | நடந்தது என்ன?

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்