Aran Sei

“மனித வாழ்க்கையே ஆபத்தில் இருக்கும் சூழலில் மத அரசியலா?” – தேஜஸ்வி சூர்யாவுக்கு அறிவுரை வழங்கிய சஷி தரூர்

கொரோனா பெருந்தொற்று சமயத்திலும் மத அரசியலை முன்னெடுத்ததாக சர்ச்சையில் சிக்கிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவுக்கு, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (பாஜக இளைஞர் பிரிவு) தேசிய தலைவரும், பெங்களூரு கிழக்கு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா, கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனகளில் படுக்கைகள் ஒதுக்குவதில் பெங்களூரு மாநகராட்சி முறைகேடு செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

தேஜஸ்வி சூர்யா அவருடைய உறவினர் மற்றும் பசவனகுடி சட்டமன்ற உறுப்பினர் ரவி சுப்ரமணியா, சிக்பெட் சட்டமன்ற உறுப்பினர் உதய் கருடாச்சார், பொம்மனஹல்லி சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் ரெட்டி ஆகியோர், பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களை மத ரீதியாக இழிவுப்படுத்தும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அந்தக் காணொளியில், தேஜஸ்வி சூர்யா, கொரோனா கட்டுப்பாட்டு அறையில் நியமிக்கப்பட்டிருக்கும் 17 இஸ்லாமிய ஊழியர்களின் பெயரைப் பட்டியலிட்டு (மன்சூர் அலி, தஹிர் அலி கான், சாதிக் பாட்ஷா, முகமது சயீர், அல்சய் சயீர், உமய்த் கான், சல்மான் குரீத், சமீர் பாட்ஷா) ”யார் இவர்கள்? எப்படி இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்? எதன் அடிப்படையில் இவர்களைத் தேர்வு செய்தீர்கள்?” என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தார்.

‘உத்தர பிரதேசத்தில் மனிதனாக இருப்பதை விட மாடாக இருப்பதே மேல்’ – சஷி தரூர்

அப்போது உடனிருந்த தேஜஸ்வியின் மாமா ரவி சுப்ரமணியா, “அவர்களை மாநகராட்சிக்காக நியமனம் செய்துள்ளீர்களா அல்லது மதரசாக்களுக்காக நியமனம் செய்துள்ளீர்களா?” என்று கேள்வியெழுப்பியது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது. மற்றொரு சட்டமன்ற உறுப்பினர், ”யார் இவர்கள்?, ஹஜ் யாத்திரைக்கு அனுப்புவது போல இந்த 17 பேரை நியமனம் செய்துள்ளீர்களா?” என்றும் கேட்டிருந்தார்.

காங்கிரஸ் ‘மிதவாத பாஜக வாக’ முயற்சித்தால் அது பூஜ்ஜியமாகிவிடும் – சசி தரூர்

பெங்களூரு மாநகராட்சி சார்பில் கொரொனா கட்டுப்பாட்டு அறையில், 205 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் சூழலில், மற்ற ஊழியர்களை விடுத்து 17 இஸ்லாமிய ஊழியர்களைப் பட்டியலிட்டதும், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்களை மத ரீதியாக இழிவுப்படுத்தும் போதும் தேஜஸ்வி சூர்யா அமைதியாக இருந்தது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

‘தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன் வழங்குவதில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்’ – பிரதமருக்கு மம்தா கடிதம்

மேலும், தேஜஸ்வி சூர்யாவால் பட்டியலிடப்பட்ட16 நபர்களின் பெயரும், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு, பெங்களூரு மாநகராட்சியால் நியமிக்கப்பட்டிருக்கும் நபர்கள், ஆயிரக்கணக்கான பெங்களூரு மக்களைக் கொலை செய்கின்றனர் என்ற தகவலுடன் தவறாக பகிரப்பட்டது.

சார்புடன் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு – மத்திய அரசு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம்

இந்தக் காணோளி சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், தேஜஸ்வி சூர்யா, ”நான் அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தவில்லை. அவர்களின் பெயர்களைப் படித்து, அவர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்கள் என்று மட்டுமே கேள்வியெழுப்பினேன்” என்று கூறியுள்ளதாக டெக்கன் ஹெரால்ட் செய்தி கூறுகிறது.

பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெக்கான் ஹரால்ட் இணையத்தில் வெளியாகியுள்ள செய்தியை தன்னுடை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர், “எங்களுடைய இளம் சக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா புத்திசாலியானவர், உணர்ச்சிப்பூர்வமானவர் மற்றும் திறமையானவர். ஆனால் இது போன்ற நடவடிக்கைகளை அவர் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மதவாத அரசியலை விட மனிதாபிமான தேவைகள் மேலோங்க வேண்டும். மனித வாழ்க்கையே ஆபத்தில் இருக்கும் சூழலில் அரசியல் மற்றும் மத ரீதியிலான ஒற்றுமை மிகவும் இன்றியமையாதது” என்று பதிவிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்