Aran Sei

சமூக ஊடகத்தின் ஊழியர்கள் யாரையும் அரசு அச்சுறுத்தவில்லை – மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம்

ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் ஊழியர்களை அரசு ஒருபோதும் அச்சுறுத்தவில்லை என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் ஊழியர்களுக்குச் சிறை தண்டனை வழங்கப்படும் என அச்சுறுத்தப்படுவதாக வெளியான செய்திகளுக்குப் பதிலளித்துள்ள அமைச்சகம், “இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து வணிகநிறுவனங்களும் போலவே சமூக ஊடகங்கள, இந்திய சட்டங்களையும் இந்திய அரசியலமைப்பையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

“நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது போல, சமூக ஊடகத்தின் பயனர்கள் அரசாங்கத்தையோ, பிரதமரையோ அல்லது எந்தவொரு அமைச்சரையோ விமர்சிக்கலாம். ஆனால் வன்முறை, வகுப்புவாத பிளவு மற்றும் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் செயல்களைச் செய்ய அனுமதிக்க முடியாது” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்க விரோத சக்திகளுக்கு எதிராக போராடுவேன் – மம்தா பானர்ஜி

நூற்றுக்கணக்கான பதிவுகள், கணக்குகள் மற்றும் ஹாஷ்டேட்களை அகற்றுமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த  உத்தரவு விதிகளை மீறுவதாகக் கூறி ட்விட்டர் ஆரம்பத்தில் முழுமையாக இணங்கவில்லை, ஆனால் அரசாங்கம் தண்டனை விதிகளைக்  காட்டிய பிறகு உத்தரவை  ஏற்றது.

 

அஸ்ஸாமின் வரலாறை தவறாக கூறிய மோடி – பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் வலியுறுத்தல்

“எந்தவொரு சமூக ஊடக தளங்களித்தின் ஊழியர்களையும் சிறைதண்டனை வழங்கப்படும்  என்று எழுதப்பட்டோ வாய்மொழியாகவோ  ஒருபோதும் அரசு அச்சுறுத்தவில்லை,” அமைச்சகம் கூறியது.

“அரசாங்கம் விமர்சனங்களையும், கருத்துகளையும் வரவேற்கிறது. எனினும், சமீப காலமாக, இந்தியாவுக்கு வெளியே இருந்து செயல்படும்  பயங்கரவாதக் குழுக்கள் வெறுப்பு, கருத்து மோதல் மற்றும் வன்முறைகளைத் தூண்டிவிடுவதற்காகச் சமூக ஊடகங்களைத் துஷ்பிரயோகம் செய்கிறது. மேலும், பெண்களின் எடிட் செய்த படங்களைப் பதிவிடுதல்,  பெண் பயனர்களின் பாதுகாப்பை  அச்சுறுத்து விதமாக  ஆபாசமான பதிவுகள் பதிவிடப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன” என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  கூறியுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்