Aran Sei

கவிஞர் ஜாவீத் அக்தரின் படத்தை வெளியிட விடமாட்டோம் என மிரட்டும் பாஜக எம்எல்ஏ – நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழுமுறை பெற்றவர், கவிஞர், திரைக்கதை எழுத்தாளர், பத்ம பூஷன் விருது பெற்ற  ஜாவீத் அக்தர், கைகளைக் கூப்பி மன்னிப்பு கேட்கும் வரை அவரது திரைப்படம் இந்தியாவில் திரையிடப்படாது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராம் கடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 3 அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய ஜாவீத் அக்தர், “ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளை ஆதரிக்கும் மக்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக, தலிபான்கள் கண்டிக்கத்தக்கவர்கள் . காட்டுமிராண்டிகள். ஆனால் நீங்கள் ஆதரிப்பவர்கள் , அவர்களிடமிருந்து [தலிபான்கள்] எவ்வகையில் வேறுபட்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

இந்நிலையில் நேற்றைய தினம் இதுகுறித்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர் ராம் கடம் , “ஒருவேளை தாலிபான் கருத்தியல் இங்கிருந்தால், அவரால் இவ்வாறு பேசிவிட முடியுமா? இந்தக் கேள்விக்கான விடையயே அவரது கருத்து அடிப்படை அற்றது என்பதை வெளிப்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “சங் பரிவார் அமைப்பினர் முன் ஜாவீத் அக்தர் கைக்கூப்பி மன்னிப்பு கேட்கும் வரை, இந்திய தாய்திரு நாட்டில் அவரது எந்த படமும் வெளியிட விடமாட்டோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

source: the indian express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்