Aran Sei

டிராக்டர்களுக்கு டீசல் தர மறுக்கும் பங்க்குகள் – விவசாயிகள் பேரணியைத் தடுக்க உ.பி., அரசு சூழச்சி

விவசாயிகளின் டிராக்டர்களுக்கு டீசல் கொடுக்கக் கூடாது என்று. உத்தர பிரதேசத்தின் யோகி ஆதித்யனாத் அரசு உத்தரவிட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பல பெட்ரோல் பங்க்குகளில், டிராக்டர்களுக்கு டீசல் போடப்படாது என்றும் பாட்டில்களில் எரிபொருள் வழங்கப்படாது என்றும், எழுதி ஒட்டியிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, இரண்டு மாதங்களாக டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள், நாளை குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தவுள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் மகா விகாஸ் அகாதி: மகாராஷ்ட்ராவில் பிரம்மாண்ட பேரணி

இந்த பேரணிக்கு தடை ஏற்படுத்தும் வகையில், உத்தர பிரதேச அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, பேரணி நடைபெறாமல் தடுப்பதற்கு டெல்லி காவல்துறை, போராடும் விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் விவசாயிகள், பேரணியில் உறுதியாக இருப்பதால், தற்போது காவல்துறையினர் விவாசயிகளிடம் பணிந்துள்ளனர்.

என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், குடியரசு தினத்தன்று, அரசு நடத்தும் அணிவகுப்பு முடிவடைந்த பிறகு, டிராக்டர் பேரணியை நடத்த வேண்டும் என்று விவசாயிகளை காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். விவசாயிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், உத்தர பிரதேசத்தில் டிராக்டர்களுக்கு டீசல் மறுக்கப்படுவதாக, அம்மாநிலம் முழுவதும் விவசாயிகள் தரப்பிலிருந்த புகார் எழுந்துள்ளதாக தி வயர் தெரிவிக்கிறது.

இதைத்தொடர்ந்து, டிராக்டர் பேரணியை யாரேனும் தடுத்தால், விவசாயிகள் அந்த இடத்திலேயே சாலை மறியலில் ஈடுபட வேண்டும் என்று, பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாதி, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

அன்றாடம், சமூகத்தில் நிகழும் அனைத்துபிரச்சனைகளுக்கும் பின்னாள் உள்ள அரசியலை முழுமையாக புரிந்துகொள்ள, அரண்செய் யூடியூப் சேனலை பின் தொடருங்கள் என அன்போடு அழைக்கிறோம். 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்