Aran Sei

எல்கர் பரிசத்  நிகழ்வுக்கும் கலவரத்திற்கும் தொடர்பில்லை – வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்

ல்கர் பரிசத்  நிகழ்வுக்கும் அதன் பின்னர் நடந்த கலவரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று  பீமா கோரேகான் வழக்கில்  குற்றச்சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக  தி இந்து செய்தி  வெளியிட்டுள்ளது.

பீமா கோரேகான் வழக்கில்  குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யபட்டுள்ள ரோனா வில்சன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் என்.ஜெ.ஜமாடார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

தேசத்துரோகச் சட்டம்: எளியதைக் கொன்று வலியது வெல்லும்

மேலும், “இது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு, இந்த வழக்கில் அந்த நிகழ்வு நடந்து எட்டு நாட்களுக்குப் பிறகே வழக்குப் பதியப்பட்டது. மேலும், இந்த வழக்கில் விசாரணை அதிகாரியின் இடமாற்றத்தின் அடிப்படையில் வழக்கு ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த வழக்கு இரண்டு காவல்நிலையங்களில் விசாரிக்கப்பட்டது” என்று  வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் சுட்டிகாட்டியுள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, “எது சட்டரீதியான மின்னணு ஆவணம் என்று இந்த நீதிமன்றம் உத்தரவு  பிறப்பிக்க வேண்டுமென  நாங்கள் வேண்டுகிறோம்.” என்று அவர் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

‘பட்டியலின மக்கள் கல்வியில் முன்னேறுவதை விரும்பாத மோடி அரசு’ – கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதற்கு ரவிக்குமார் கண்டனம்

மேலும், கணினி ஆதாரங்கள் கைப்பற்றப்படுவது குறித்து குற்றவியல் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதற்கான அதிகாரப்பூர்வ சட்டம் இயற்றப்பட வேண்டும். அவர்கள் மூன்று வருடமாக சிறையில் உள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமான ஆதாரம் எதாவது உள்ளதா? அவர்களிடம் குற்றம்சாட்டப்பட்டவரின் ஹார்ட் டிஸ்க்கும், அதில் சில கடிதங்கள்  மட்டுமே இருந்தன. ஆனால் அதுவும்  முறையான  சட்ட அணுகுமுறையில் கைபற்றப்படவில்லை.” என்று  வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கேள்வி எழுப்பியுள்ளதாகவும்   தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மேக்கேத்தாட்டுவில் அணைக்கட்டினால் டெல்டா விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவர்’ – தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பீமா கோரேகான் வழக்கில்  குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யபட்டுள்ள ரோனா வில்சன், அவர் மீதான மின்னணு ஆவணங்கள் புனையப்பட்டவை எனவே அவர் மீதான குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டுமென கோரி இந்த மனுவைத் தாக்கல் செய்ததாகவும் அந்த செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்