Aran Sei

புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை பின்பற்றாத செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் – நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை தற்போது பின்பற்றாத செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாதென கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதி பி.பி.சுரேஷ் வழங்கியுள்ள இந்த உத்தரவில்,”தகவல் தொழில்நுட்ப விதிகளின் மூன்றாம் பாகத்தில் உள்ள விதிகளுக்கு இணங்காத மனுதாரர்கள்(செய்தி ஒளிபரப்பாளர்கள்) மீது எதிர்மனுதாரர்கள் (respondents) எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

இந்த மனுவில்,”மின்னணு செய்தி ஊடகங்கள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் மேற்பார்வை நடைமுறையானது, தடையற்ற மற்றும் அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளி – நீதி வேண்டி மக்கள் ஆர்ப்பாட்டம்

மேலும், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் தாக்கல் செய்த அந்த மனுவில், ஊடகத்தின் கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டு உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்