ராணுவ நடவடிக்கைகளுக்கு பணம் பரிசளிக்கும் முறை எதுவும் நடைமுறையில் இல்லை என்று, இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், காஷ்மீரின் சோபியான் பகுதியில், ராணுவ கேப்டன் பூபிந்தர் சிங் தலைமையில், தீவிரவாதிகளுக்கு எதிரான நடடிவக்கை என்ற பெயரில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அப்ரார் அஹமத் (வயது 25), இம்தியாஸ் அஹமத் (வயது 20), முஹம்மது இப்ரார் (வயது 16) ஆகிய மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் என்கவுன்டர் – நீதி வேண்டும் : போலீஸ் விளக்கத்தை மறுக்கும் இளம் காஷ்மீரிகளின் குடும்பத்தினர்
ராணுவத்திற்கு தகவல் அளிக்கும் உளவாளிகளான, சோபியான் பகுதியை சேர்ந்த தபிஷ் அஹமத், புல்வாமா பகுதியை பிலால் அஹமத் ஆகிய இருவரும், கேப்டன் பூபிந்தர் சிங்கிற்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சியளித்துள்ள நான்கு பேர், தாக்குதல் நடந்த தினத்தில், மக்களை அப்புறப்படுத்தாமல், வந்த வேகத்தில் பூபேந்தர் சிங், சில ரவுண்டுகள் சுட்டுதாக கூறியுள்ளனர் என்று, குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவர்கள் (பூபிந்தர் சிங், தபிஷ் அஹமத், பிலால் அஹமத்) குற்றத்திற்கான ஆதாரத்தை வேண்டுமென்றே அழித்துள்ளனர். 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை பெறுவதற்காக, திட்டமிட்டு தவறான தகவலை அளித்து குற்றச் சதியில் ஈடுபட்டுள்ளனர்” என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகளை நம்ப வைப்பதற்காக, கொல்லப்பட்டவர்களிடமிருந்து, இரண்டு கைத்துப்பாக்கிகள், அவற்றின் குண்டுகள் மற்றும் ஏ.கே 47 ரக துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பூபேந்தர் சிங் காட்டியுள்ளார்.
பெல்லட் குண்டுகளும், காஷ்மீர் இளைஞர்களின் இருண்டு போன வாழ்க்கையும்
கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களும், ரஜௌரி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்று தெரியவந்துள்ளது. கேப்டன் பூபிந்தர் சிங் மற்றும் இரண்டு உளவாளிகள் மீது, கொலை உட்பட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஊடகங்களில் வெளியான இந்த செய்தி குறித்து இந்திய ராணுவத்தின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. “தீவிரவாதிகளை கொன்றால் 20 லட்சம் கிடைக்கும் என்ற உந்துதலிலேயே, அம்ஷிபூரா தாக்குதல் நடைபெற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. களத்தில் நடவடிக்கையில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு பணம் பரிசளிக்கும் திட்டம் எதுவும் இந்திய ராணுத்தில் நடைமுறையில் இல்லை. அந்த செய்திகள், இந்திய ராணுவத்தில் நடைமுறையில் உள்ள செயல்முறைகளை தவறாக சித்தரித்துள்ளது” என ஸ்ரீநகரைச் சேர்ந்த ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.