ஜூன் 10 ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற்ற கலவரத்தின்போது, உயிரிழந்த முடாசிர் மற்றும் சாஹிலின் உடலில் தோட்டாக்கள் இல்லை. தோட்டாக்கள் உடல் வழியாக துளைத்து சென்றதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஹம்மது நபி தொடர்பாக நுபுர் சர்மா கருத்து தெரிவித்ததற்கு எதிராக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதில், ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தை அடக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர்.
முன்னதாக, முடாசிரின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் அளித்த மனுவில், கோயில் வளாகத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
போராட்டங்களின்போது கோயில் வளாகத்திற்குள் இந்துத்துவா பைரோ (பைரவ்) சிங் மற்றும் இந்துத்துவ செயல்பாட்டாளர்கள் சசி சரத், கரண் மற்றும் சோனு சிங் ஆகியோர் இருந்ததாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) சுரேந்திர குமார் ஜா தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, பைரவ் சிங் குற்றமற்றவர் என்று கூறியுள்ளது.
போராட்டங்களின்போது, பைரவ் சிங்கின் செல்போன் வேறு இடத்தில் இருந்தது. போராட்டக் காணொளிகளில் கோயில் ஜன்னல்களில் தென்பட்ட வெளிச்சம் துப்பாக்கி சுடும் காட்சிகள் அல்ல. மாறாக அவை பகலில் ஆர்பாட்டங்களின் புகைப்படங்களை எடுத்த ஒரு நபரின் கேமரா ப்ளாஷ் என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
விசாரணை அறிக்கையை நிராகரித்து முகநூலில் பதிவிட்டுள்ள முதாசிரின் மாமா ஹாஹித் அயூபி, ”இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். எனது மருமகன் மரணத்திற்கு வழிவகுத்த ”துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பான அதே நபர்கள் நடத்தப்பட்ட எந்தவொரு விசாரணையின் மீதும் தனக்கு எனக்கு நம்பிக்கையும் இல்லை” என்று கூறியுள்ளனர்.
”இந்த அறிக்கை நான் இன்னும் பார்க்கவில்லை. இது ஒரு ஊடக அறிக்கையாக இருக்கலாம், ஊடக விசாரணையாக இருக்கலாம். ஆனால், நானே அந்த அறிக்கையை பார்க்கும் போது மட்டுமே என்னால் கருத்து தெரிவிக்க முடியும்” என்று ராஞ்சி மூத்த காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர குமார் ஜா தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட்: நுபுர் ஷர்மாவுக்கு எதிராக போராட்டம் – காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு
ஜூன் 11 தேதி இரண்டு பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டதற்கான காரணம்குறித்து கேட்டபோது, ”சிஐடி ஒரு சிறப்பு நிறுவனம். இந்த விசாரணையை சிறந்த மற்றும் சரியான வழியில் நடத்த இந்த வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது” என்று ஜா கூறியுள்ளார்.
ராஞ்சி வன்முறை நடைபெற்று ஒரு மாதம் கடந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் அளித்த புகார்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
Source: The Wire
காவி கும்பலின் தூக்கத்தை கெடுத்தவர் Mohammed Zubair | Alt News Mohammed Zubair Arrest | Nupur Sharma
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.