Aran Sei

மோடி அரசை விமர்சித்த பேராசிரியர் பணியிடை நீக்கம் – தேசவிரோத கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் பாடம் எடுக்க வேண்டாம் என நிர்வாகம் சுற்றறிக்கை

பேராசிரியர்கள்  தேசவிரோதக் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் பாடம் எடுக்க கூடாதென  கேரளாவில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகம்   உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அப்பல்கலைக்கழகப் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அந்த பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு உறவுகள் மற்றும் அரசியல் துறையின் உதவிப் பேராசிரியர் கில்பர்ட் செபஸ்டியன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முதலாமாண்டு முதுகலை மாணவர்களுக்கு “பாசிசம் மற்றும் நாசிசம்” குறித்து வகுப்பெடுத்த  பேராசிரியர் கில்பர்ட் செபஸ்டியன், சங்பரிவார் அமைப்புகள் மற்றும் நரேந்திர மோடி அரசாங்கம்  பாசிஸ்ட் என்றும், கொரோனா தடுப்பு மருந்தை  ஏற்றுமதி செய்யும் ஒன்றிய அரசின்  முடிவானது   தேசத்தின் மீது பக்தியற்றது   என்று அவர்  விமர்சித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து விளக்கம் கோரப்பட்ட நிலையில் விசாரணைக்கு பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,“தேச விரோத மற்றும் தேசத்தின் நலனுக்கு எதிரான எந்தவிதமான தூண்டுதலூட்டக்கூடிய  வார்த்தைகள்  அல்லது சொற்பொழிவுகளையும்  பேராசிரியர்கள்  தவிர்க்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சுற்றறிக்கையை அடுத்து  அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

Source: The indian express 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்