Aran Sei

சத்தீஸ்கர்: தேசிய விளையாட்டு அகாடமியில் சாதியப் பாகுபாடு – பட்டியலின மாணவர்களுக்கு பயிற்சி அளிக்காத பயிற்சியாளர்கள்

Credit : The Wire

த்தீஸ்கர் மாவட்டத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய விளையாட்டு அகாடமியில் இருக்கும் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த இரண்டு பயிற்சியாளர்கள் சாதிய பாகுபாடுடன் மாணவர்களை நடத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 5 மாணவர்கள் பயிற்சி எடுப்பதில் கவனம் செலுத்தவில்லை என கூறி பயிற்சியாளர்கள் பயிற்சி அளிப்பதை நிறுத்திவிட்டனர்.

பயிற்சி நிறுத்தப்பட்டது தொடர்பாக ஜன. 4 தேதி அகாடமி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், உடற்பயிற்சி கூடங்களை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்காமல், மாவட்ட நிர்வாகம் பூட்டி விடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹரியானாவில் நடைபெறவிருக்கும் கேளோ இந்திய விளையாட்டு போட்டிக்கு இந்த மாணவர்கள் தேர்வாகியிருக்கும் நிலையில், அவர்களுக்கு இந்த பயிற்சி மிகவும் அத்தியாவசியமாக ஆகிறது. ஆனால், பயிற்சியாளர்கள் சூரஜ் குப்தா, பிரகார்ஷ் ராவ் இருவரும் ஊரடங்கை காரணம் காட்டி, பயிற்சி அளிக்க மறுத்து வருகின்றனர்.

Source : The Wire

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்