Aran Sei

அந்தமான் தீவில் அமையவிருக்கும் மத்திய அரசின் வர்த்தக மண்டலம் – காடுகள் அழியுமென்று நிபுனர்குழு எதிர்ப்பு

ந்தமான் தீவுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட இருக்கும் முழுமையான மற்றும் நிலையான தொலைக்குநோக்கு பார்வையை கொண்ட நிதி  ஆயோக்கின் திட்டத்தில் பழங்குடியினர்கள் புறக்கணிப்படுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக, அந்தமான் தீவுகள் பகுதியில் தெற்கில் இருக்கும் கிரேட் நிகோபர் தீவில் சுமார் 150 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 910 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தீவில், இது 18 விழுக்காடு என்றும், மொத்த கடற்கரையில் நான்கில் ஒரு பகுதி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

244 சதுர கிலோமீட்டரில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் திட்டத்தின் முதற்கட்ட பணிகளில் 22 சதுர கிலோ மீட்டர் கொண்ட விமான நிலைய வளாகம், 12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் துறைமுகம், சுதந்திர வர்த்தக மண்டலம், சேமிப்பு கிடங்கு ஆகியவை அடங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய துறைத்தலைவர்: போராடிய மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சி

நிதி ஆயோக்கின் இந்தத் திட்டம் அங்கு அமைந்திருக்கும் வனவிலங்கு சரணாலயத்தின் சூழலியல் தன்மையைப் பாதிப்பதாக, மத்திய சுற்றுசூழல் அமைச்சக நிபுணர் குழு, ஜனவரி 18 ஆம் தேதி தெரிவித்துள்ளதாக, தி இந்து கூறியுள்ளது.

யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அந்தச் சரணாலயத்தில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. மேலும், உலகில் சிறந்த பாதுகாக்கப்பட்ட மழைக்காடுகளில் ஒன்றாகும். இங்கு 648 வகையான தாவர இனங்கள், 330 வகையான விலங்கினங்கள் உள்ளன. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அவற்றுக்கு எல்லாம் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் குழு கூறியிருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரநிலை காலக்கட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு மதிப்பூதியம் – இமாச்சல் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்

இதே திட்டத்தால் அந்தப் பகுதியில் இருக்கும் வேட்டியாடும் பழங்குடியின சமூகமான ஷோம்பென் பழங்குடியினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும், 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சோம்பென் கொள்கைக்கு எதிராக, அவர்களில் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இந்தத் திட்டம் இருக்கிறது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்