நாடாளுமன்ற மாநிலங்களவையில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளுக்கான “பிரதமர் கிசான் சம்மான் நிதி” (PM-Kisan Samman nidhi) திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, குறைக்கப்பட்டதற்கான காரணம்குறித்து தெரிவித்துள்ள கருத்தில் முரண்பாடு உள்ளது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளது குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்துள்ள நிர்மலா சீதாராமன், மேற்கு வங்க மாநிலத்தில் இந்தத் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் பட்டியல் கிடைக்கவில்லை என்று கூறினார். ஆகவே, கடந்த நிதி ஆண்டிலும், நடைபெற்று வரும் நிதி ஆண்டிலும் இந்தத் திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“சோசியலிசம் என்பது சுமை; பொதுத்துறை நிறுவனங்களை விற்பதே எங்கள் நோக்கம்” – நிர்மலா சீதாராமன்
10.75 கோடி விவசாய குடும்பங்களுக்கு, 1.15 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், மேற்கு வங்கத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பபெறும் 69 லட்சம் விவசாய குடும்பங்களின் பட்டியலை அந்த மாநில அரசு தரவில்லை என்று கூறினார்.
ஆகவே, கடந்த ஆண்டு 10,000 கோடி ரூபாயும், நடப்பு ஆண்டில் 10,000 கோடி ரூபாயும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.
இந்தத் திட்டம் தொடர்பான அரசு இணையதளத்தில் (pmkisan.gov.in), 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்த இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 2 ஹக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு அதிகபட்சமாக 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகை, மூன்று தவணையாக, ஒவ்வொரு தவணையிலும் 2,000 ஆயிரம் ரூபாய், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
அந்தவகையில், மேற்கு வங்கத்தில் உள்ள 69 லட்சம் விவசாய பயனாளிகளுக்கு, ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்குவதற்கு, 4 ஆயிரத்து 140 கோடி ரூபாய் தேவைப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு, 8 ஆயிரத்து 280 கோடி ரூபாய் தேவைப்படும்.
தனியார்மயமாகும் விசாகப்பட்டினம் எஃகு ஆலை – பதவியை ராஜினாமா செய்த தெலுங்கு தேச சட்டசபை உறுப்பினர்
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள 69 லட்சம் பயனாளர்களுக்கு நிதி அளிக்க முடியாததால், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும், தலா 10 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
ஆகவே, நிர்மலா சீதாராமன் கூறிய கணக்கின் படி, மேற்கு வங்க விவசாயிகளுக்க சேர வேண்டிய நிதியைக் கழித்துவிட்டு பார்த்தாலும், “பிஎம்-கிசான் சம்மான் நிதி” திட்டத்திற்கு ஆண்டுக்கு 5,860 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு மற்றும் நடப்பு நிதியாண்டில், விவசாயிகளுக்கு உதிவியளிக்கும் “பிஎம்-கிசான் சம்மான் நிதி” திட்டத்திற்கு சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.