Aran Sei

நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் – இங்கிலாந்து நீதிமன்றம் ஒப்புதல்

ஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், இந்தியாவால் தேடப்பட்டு வரும் நீரவ் மோடியை, இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என்று இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

இந்திய சிறை நிலைமைகள் மற்றும் கொரோனா பெருந்தொற்றின்போது அவரது மனநிலை மோசமடைந்தது போன்ற வாதங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பது எந்த வகையிலும் மனித உரிமைகள் மீறல் இல்லை என்பதில் திருப்தி அடைகிறேன்” என்றும், இதை எதிர்த்து முறையீடு செய்ய அவருக்கு உரிமை உள்ளது என்றும் நீதிபதி சாமுவேல் கூஸி கூறியதாக அந்த செய்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு புதிய விதிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு

”இந்தியாவிடம் ஒப்படைத்தால் அவருக்கு நீதி கிடைக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்பதால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என நீதிபதி குறிப்பிட்டதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

நீரவ் மோடிக்கு எதிராக இந்தியாவில் வலுவான வழக்கு இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, திரும்பச் செலுத்தபடாத வங்கி கடன் தொடர்பான ஆவணங்களை அளிப்பதில், நீரவ் மோடி மற்றும் அவருடன் தொடர்பில் இருக்கு அதிகாரிகளுக்கும் பங்கிருக்கிறது என தெரிவித்ததாக அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

”பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நீரவ் மோடி எழுதிய கடித்ததில் கடன் இருப்பதை ஒப்புக்கொண்டதோடு, அதைத் திரும்பிச் செலுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார். நீரவ் மோடியால் போலியாக நடத்தப்பட்டு வந்த நிறுவனங்கள் தொடர்பாக சிபிஐ  விசாரித்து வருகிறது” என்பதை  குறிப்பிட்ட நீதிபதி, இந்த நிறுவனங்கள் நீரவ் மோடியால் நடத்தப்பட்டு வந்த நிழல் நிறுவனங்கள் எனக் கூறியதாக, என்டிடிவி தெரிவித்துள்ளது.

ஓரே பாலின திருமணம் இந்திய குடும்ப அமைப்புக்கு எதிரானது- மத்திய அரசு

“நீரவ் மோடி முறையான வியாபாரத்தில் ஈடுபட்டார் என்பதை நான் ஏற்கவில்லை. உண்மையான பரிவர்த்தனைகள் எதையும் நான் காணவில்லை. நீரவ் மோடியின் செயல்பாடுகளில் நேர்மையின்மை இருப்பதாக நம்புகிறேன்” என நீதிபதி தெரிவித்ததாக, என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் வழக்கு நடந்து நீரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டால், அங்கிருக்கும் நிலைமை குறித்து நீரவ் மோடி தரப்பு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், நீரவ் மோடி அடைக்கப்பட இருக்கும் மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில், அடிப்படை மனித உரிமை தேவைகளான சுத்தமன காற்று, இயற்கை வெளிச்சத்துடன் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் பராமரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் காணொளியை, இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்திய அரசு சமர்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்