Aran Sei

கோவாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 26 பேர் மரணம் – முன் கூட்டியே எச்சரித்த மருத்துவர் சங்கம்

கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக 26 பேர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வு நடப்பதற்கு 6 நாட்களுக்கு முன்னரே, கோவா மருத்துவர்கள் சங்கத்தினர், ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து அம்மருத்துவமனை முதல்வருக்கு கடிதம் எழுதியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திவெளியிட்டுள்ளது.

கர்நாடகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் தடுப்பாடு – பேருந்துகளை படுக்கைகளாக மாற்றிய அரசு

இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற கோவா கிளை அமர்வில், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவே 26 பேர் உயிரிழந்ததாக கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையின் முதல்வர் டி.எம்.பாண்டேக்கர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 197 பேர் மரணம் – ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேர்ந்த அவலம்

கடந்த மே 5 அன்று மருத்துவர்கள், மருத்துவமனை முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உயரதிகாரிகள் ஆக்சிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை இல்லை என்று கூறிவரும் நிலையில், நோயாளிகள் ஏன் ஆம்புலன்ஸிலும், சக்கர நாற்காலிகளிலும் இருக்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பணியிலுள்ள மருத்துவர்களிடம் கேள்வி எழுப்புகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்