Aran Sei

கொரோனா தொற்று பரவல் எதிரொலி : புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை

credits : the indian express

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 25 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 21,822 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.02 கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா தொற்று – தமிழகத்தில் ஒருவருக்கு பாதிப்பு

புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களை விட ஆறு சதவீதம் அதிகரித்து 20,549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனால் இறப்பு எண்ணிக்கை 299 அதிகரித்து, மொத்த இறப்பு 1,48,738 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவும் புதியவகை கொரோனா – நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களால் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்க கோரி மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : பரவ தொடங்கிய புதிய வகை கொரோனா

அந்த அறிவிப்பில் இந்தியாவில் கடந்த மூன்றரை மாதங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது எனவும் ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் கொரோனாவின் புதிய வகை கொரோனா பரவி வருவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கடுமையான கண்காணிப்பும் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவை என மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் நாடாளுமன்ற கட்டிடம் தேவையா? – முன்னாள் அரசு அதிகாரிகள் கேள்வி

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளனர்.
டெல்லியின் பேரிடர் மேலாண்மை வாரியம் டிசம்பர் 31-ம் தேதி இரவு 11 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாக உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘கொரோனா தடுப்பூசி எப்போது வரும் மோடிஜி?’ – ராகுல்காந்தி கேள்வி

டெல்லியை போன்று மும்பையிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இன்று மதியம் முதல் பொது இடங்களில் அதிகம் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவர் 1 காலை வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகர் மற்றும் மேற்கு வங்கத்தில் பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

’கொரோனா வருவதற்கு சாத்தியமுள்ள வேலைகளில் ஈடுபட வேண்டாம்’ – ரஜினிக்கு அப்போலோ அறிவுறுத்தல்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரைகள் மூடப்படுவதாகவும் புத்தாண்டில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான உணவு விடுதிகள், பார்கள் ஆகியன இரவு 10 மணிக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒழுங்குப்படுத்த 10,000 த்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்