Aran Sei

போராட்டத்திற்கு தீவிரவாத அமைப்புகளில் இருந்து நிதி – விவசாயிகள் தலைவருக்கு என்ஐஏ சம்மன்

ட்டவிரோத சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாயிகள் சங்கத் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சம்மன் அனுப்பி உள்ளது.

டெல்லி எல்லைகளில், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெற கோரி, 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். போராட்டத்தில் பல விவசாய சங்கங்கள் கலந்துக்கொண்டுள்ளன. அவற்றுள் லோக் பலாய் இன்சாப் நலவாழ்வு சொசைட்டி சங்கமும் ஒன்று.

‘போராடும் விவசாயிகளை தேசவிரோதிகள் என்று சாயம் பூசும் மத்திய அரசு’ – சிவசேனா கண்டனம்

நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தல், மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டுதல், மத்திய அரசுக்கு எதிராக செயல்படுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில், ‘சீக்கியர்களுக்கு நீதி’ (எஸ்எப்ஜே) என்ற சட்டவிரோத சீக்கிய அமைப்பின் தலைவர் குர்பட்வந்த் சிங் பன்னு செயல்படுவதாகப் புகார் எழுந்ததை அடுத்து, என்ஐஏ அவர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், லோக் பலாய் இன்சாப் நலவாழ்வு சொசைட்டி சங்கத்தின் தலைவர் பல்தேவ் சிங் சிர்சாவுக்கு என்ஐஏ சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், இன்று (ஜனவரி 17),  எஸ்எப்ஜே அமைப்பின் நடவடிக்கைகள் குறித்த விசாரணைக்கு, டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தில் ‘தீவிரவாதிகள்’ என மத்திய அரசு குற்றச்சாட்டு – பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி உத்தரவு

இதுகுறித்து, பல்தேவ் சிங் சிர்சா கூறும்போது, “விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கவே, எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மூலம் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு முயற்சித்தது. இப்போது என்ஐஏ மூலம் ஒடுக்க நினைக்கிறது. விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் பலருக்கும் என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்.” என்று உறுதியளித்ததாக ஸ்க்ரோல் தெரிவித்துள்ளது.

“டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதி வசூலிக்கப்படுகிறது. பிரிட்டன், கனடா, ஜெர்மனி உட்பட பல நாடுகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அரசு சாரா அமைப்புகள் வழியாக ஏராளமான நிதி இந்தப் போராட்டத்துக்கு அனுப்பப்படுகிறது. இந்தியாவில் உள்ள காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர்.” என்று என்ஐஏ-வின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மோடியும் இந்திய ட்ரம்பும் – வீழும் ஜனநாயகம்

நடிகரும், விவசாய போராட்டத்தில் ஈடுபட்டு வருபவருமான தீப் சித்து மற்றும் அவரது சகோதரர் மந்தீப் ஆகியோருக்கும் என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து தீப் சித்து பேசும்போது,“நான் முதல் நாளில் இருந்து விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்று வருகிறேன். என்னை மனச்சோர்வடையச் செய்ய வேண்டும் என்று, என்னுடைய குடும்ப உறுப்பினர்களையும் துன்புறுத்த அரசு முடிவு செய்துள்ளது.என்னுடைய இந்த செயல்பாட்டுடன் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.” என்று  ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

இவர்கள் தவிர, சுற்றுலா ஓட்டுனர் இந்தர்பால் சிங் , சிறு தொழிலாளர் நரேஷ் குமார், கேபிள் டிவி ஆபரேட்டர் ஜஸ்பால் சிங், சீக்கிய ஆர்வலர்கள் சுரிந்தர் சிங் திக்ரிவாலா, ஹோஷியார்பூரைச் சேர்ந்த நோபல்ஜித் சிங், பால்விந்தர் சிங் , பர்தீப் சிங், பர்ம்ஜித் சிங் அகாலி மற்றும் சீக்கிய எழுத்தாளர் பால்விந்தர்பால் சிங் ஜலந்தர் ஆகியோரும் என்ஐஏ விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது – விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை

விவசாய சட்டங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தனிநாடு கோரும் அமைப்பினர் ஊடுருவி உள்ளதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.” என்று வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்