பீமா கோரேகான் எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள்மீது தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் வரைவு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
அந்தக் குற்றப்பத்திரிகையில், “ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சியின் வாயிலாக மக்கள் அரசைக் கட்டமைக்க முயற்சித்தார்கள். அரசின் அங்கத்தினர்களைக் கொல்ல முயற்சி செய்தார்கள்” என்றும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது.
இந்த வரைவு குற்றப்பத்திரிகையில், பிரதமர் மோடியை கொல்லத் திட்டம் தீட்டினார்கள் என கடந்த 2௦18 என்.ஐ.ஏ சுமத்தியிருந்த குற்றச்சாட்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால், அரசின் அரசின் அங்கத்தினர்களைக் கொல்ல முயற்சித்தார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், பீமா கோரேகான் எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் தடைசெய்யப்பட்ட சி.பி.ஐ [மாவோயிஸ்ட்] மற்றும் அதன் முன்னணி அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்றும் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை சமர்பித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, “ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சியின் வாயிலாக அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றி, மக்கள் அரசை அமைப்பது இவர்களின் பொதுநோக்கமாக இருந்தது” என்றும் அந்தக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆயுதம் வாங்குவதற்காக 8 ரூபாய் திரட்டினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதே போன்று, குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெடிப்பொருட்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வழியாக நாட்டின் ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த உதவினர் என்றும், தனிப்பட்ட நபர்களுக்கு காயம் அல்லது உயிர்ச்சேதம் விளைவிக்கவும், அரசின் அங்கத்தினர்களைக் கொல்ல முயற்சி செய்தனர் என்றும் அந்தக் குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
source:லைவ் லா
தொடர்புடைய பதிவுகள்:
” போராடுவது அடிப்படை உரிமை, கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாது” – உச்சநீதிமன்றம்
ஒன்பது மாதங்களை நிறைவு செய்யும் விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லையை அடைந்த தமிழ்நாட்டு விவசாயிகள்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.