Aran Sei

காலிஸ்தானுக்கு விவசாயிகள் ஆதரவா?: விசாரணையைத் தள்ளி வைத்த தேசிய புலனாய்வு முகமை

2019 ஆம் ஆண்டு,  சீக்கியர்களுக்கான தனிநாடாக காலிஸ்தான் உருவாக்குவதற்கு ஆதரவான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இந்தியாவில் பிரிவினைவாதத்தைப் பரப்புவதாகவும் கூறி ’சீக்கியர்களுக்கான நீதி’ (எஸ்.எஃப்.ஜே) என்கிற அமைப்பை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தடைசெய்தது. அந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி, இதுவரை 12 பேரைத்  தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரனை செய்துள்ளது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி, எஸ்.எஃப்.ஜே-வுக்கு எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து,கடந்த ஜனவரி 15 ஆம் தேதி, அந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க  40 பேருக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியுள்ளது. அந்த 40 பேரும் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களாகவும் அங்கு  மனிதாபிமான உதவிகளை வழங்கி வருபவர்களாகவும் உள்ளனர் என்று தி இந்து குறிப்பிட்டுள்ளது.

போராட்டத்திற்கு தீவிரவாத அமைப்புகளில் இருந்து நிதி – விவசாயிகள் தலைவருக்கு என்ஐஏ சம்மன்

அந்த 40 பேரில் இருவர் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘கல்சா எய்ட்’ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவ்விரு முக்கிய உறுப்பினர்களை விசாரிக்க இருந்த என்ஐஏ, அதை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

“நேற்றும் இன்றும் இந்தியவச் சேர்ந்த இரண்டு முக்கிய உறுப்பினர்களை விசாரிக்க இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால்,  அதையும் என்ஐஏ ஒத்திவைத்துள்ளது. மேலதிக அறிவிப்பு வரும் வரை விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக என்ஐஏ எங்களுக்கு தொலைபேசியில் செய்தி அனுப்பியுள்ளது.” என்று கல்சா எய்ட் நிறுவனர் ரவீந்தர் சிங் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து நிதி: போலி செய்தியை வெளியிட்ட நியூஸ் 18

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் உணவு நிலையங்களையும் கால் மசாஜ் இயந்திரங்களையும் வழங்கியது.

2019 பொதுத்தேர்தலின் போது குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் சன்னி தியோலுக்காக பிரச்சாரம் செய்த பஞ்சாபி நடிகர் தீப் சித்துவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் என்ஐஏ முன் விசாரனைக்கு ஆஜராகவில்லை.

பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது – விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை

கடந்த இரண்டு மாதங்களாக சிங்கு எல்லையில் நடக்கும் விவசாய போராட்டத்தில் பங்கெடுத்துள்ள தீப் சித்து, “என்னுடைய வங்கி கணக்கிலோ அல்லது எனது குடும்பத்தினருடைய வங்கி கணக்கிலோ, வெளிநாட்டிலிருந்து அல்லது இந்தியாவில் உள்ள எவரிடமிருந்தோ, எந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனத்திலிருந்தோ ஒரு பைசா கூட எனக்கு கிடைக்கவில்லை. நாங்கள் தேச விரோதமாக எதுவும் செய்யவில்லை. ஆனால் இது (என்ஐஏ-வின் சம்மன்) அரசியல் நோக்கம் கொண்டது. நோட்டீஸ் வழங்கப்பட்ட அனைவரும் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளவர்கள். இந்த  விசாரணைகளுக்காக நாங்கள் வெட்கப்படப் போவதில்லை.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

83 வயது ஸ்டேன் சாமிக்கு வழங்க உறிஞ்சு குழல் இல்லை – நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்

மேலும், “அந்த சம்மனில், விசாரனைக்கு சாட்சியாக ஆஜராகுமாறுதான் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அவர்கள் அதை பிரிவு 120 பி ஐபிசி (குற்றவியல் சதி)-யின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். காரணம், வருங்காலத்தில் எங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இந்த வழக்கை அவர்கள் பயன்படுத்தலாம். நான் ஒரு வழக்கறிஞர். என்னால் அவர்களின் (என்ஐஏ) அழுத்தம் காண முடிகிறது. இந்த 40 பேரில் சிலரை மறைமுகமாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று வற்புறுத்துகிறார்கள். பேருந்து சேவை வழங்கிய ஒருவரை, ஏன் போராட்டக்காரர்களுக்கு வாகனங்களை வழங்குகிறாய் என்று தொந்தரவு செய்துள்ளனர். எனக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். நான் என் அனைத்து வங்கி அறிக்கைகளையும் எடுத்துக் காட்டிவிட்டேன். அதில் எதுவும் இல்லை.” என்று பஞ்சாபி நடிகர் தீப் சித்து தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்