Aran Sei

83 வயதான ஸ்டேன் சாமி கலவரத்திற்கு காரணம் – ஜாமீன் வழங்க என்ஐஏ எதிர்ப்பு

Image Credits: Outlook India

ல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட பழங்குடியினர் உரிமை செயல்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகான் என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறையில், ஸ்டேன் ஸ்வாமி ஈடுபட்டுள்ளதாகவும் மாவோயிஸ்ட்டுகளுடன் அவருக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் தேசிய புலனாய்வு அமைப்புக் குற்றம் சாட்டியுள்ளது.

83 வயது ஸ்டேன் சாமிக்கு வழங்க உறிஞ்சு குழல் இல்லை – நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்

சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டான் ஸ்வாமி தனக்கு பிணை வழங்கக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதை எதிர்த்துத் தேசிய புலனாய்வு அமைப்பின் சார்பில் அரசு வழக்கறிஞர் பிரகாஷ் ஷெட்டி பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், ஸ்டான் ஸ்வாமிக்கு வன்முறைக்குச் சதித்திட்டத்தை திட்டியதில் பங்கு உண்டு என்பதையும் நேரடியாக அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டவர் என்பதையும் நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

பாதிரியாரும் பழங்குடி உரிமை ஆர்வலருமான ஸ்டான் ஸ்வாமி, அக்டோபர் 8-ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஸ்டான் ஸ்வாமி வழக்கில் நீதிமன்றத்தின் செயல்பாடு அநியாயமானது- மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு குற்றச்சாட்டு

முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்டான் ஸ்வாமிக்கு எதிராக  இதே போன்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய புலனாய்வு அமைப்பின் பிரமாண பாத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டான் ஸ்வாமியின் கணினியிலிருந்து சேகரித்த தகவல்களை விசாரித்து வருவதாகக் கூறியுள்ள புலனாய்வு அமைப்பு, அவரது பிணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டது.

அர்னாபுக்கு உடனடி ஜாமீன்; ஸ்டான் சாமிக்கு ஒரு உறிஞ்சு குழல் கூட தரமுடியாது – நீதியின் மறுபக்கம்

தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 21-ம் தேதி பிணை மனுவை விசாரிக்கவுள்ளது.

முன்னதாக, கைது செய்யப்பட்ட நேரத்தில் பறிமுதல் செய்த தனது பையைத் திருப்பித் தரக் கோரியும் மடிக்கணினியின் ஒரு பதிவு வேண்டும் என்றும் ஸ்டான் ஸ்வாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். டிசம்பர் 21-ம் தேதி இந்த மனுக்களையும் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்