Aran Sei

அமெரிக்க நிறுவனத்தின் தகவல்களை ஏற்றுக் கொள்ள கூடாது: ரோனா வில்சன் வழக்கில் நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்த மனு

credits : the scroll

பீமா கோரேகான் வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை, ரோனா வில்சனின் கணிணி ஹேக் செய்யப்பட்டுள்ளது என்னும் குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்க கூடாது என பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்சனல் என்ற மின்னணு தடயவியல் நிறுவனம், பீமா கோரேகான் வழக்கில் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையின் பேரில் மடிக்கணினியின் மின்னணு நகல் ஒன்றை ஆய்வு செய்துள்ளது. இந்த அறிக்கையின் ஒரு நகலை வாஷிங்டன் போஸ்ட் பரிசீலித்துள்ளது.

பிப்ரவரி மாதம் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியாக வெளியிட்ட, ஆர்சனலின் முந்தைய பகுப்பாய்வு ஒன்றில், மோடியை கொலை செய்வதற்கான சதித்திட்டம் என்று கூறப்படுவதைப் பற்றிய ஒரு கடிதம் உட்பட 10 கடிதங்கள், ஒரு ஹேக்கரால் அந்த மடிக்கணினியில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்தது. தற்போதைய ஆர்சனல் அறிக்கையின்படி, இன்னும் 22 ஆவணங்கள் அதே ஹேக்கரால் கணினிக்குள் வைக்கப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

பீமா கோரேகான் வழக்கு – பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக கூறப்படும் மடிக்கணினி ஹேக் செய்யப்பட்டது : புதிய அறிக்கை

குற்றம் சாட்டப்பட்ட செயற்பாட்டாளர்கள் இந்திய அரசுக்கு எதிராக பல பத்தாண்டுகளாக கிளர்ச்சி நடத்தி வரும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் போராளிக் குழுவுடன் இணைந்து செயல்பட்டதற்கான ஆதாரங்களாக இந்த 32 ஆவணங்களைத்தான் இந்திய அரசு முன்வைத்துள்ளது.

சர்வதேச கம்யூனிச அமைப்புகளுடன் மாவோயிஸ்டுகள் பற்றிய ஆவணங்களை டெல்டும்ப்டே பகிர்ந்தார்: தேசிய புலனாய்வு முகமை குற்றச்சாட்டு

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம், பீமா கேரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ரோனா வில்சன் அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி தன் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

பீமா கோரேகான் வழக்கில் புதிய திருப்பம் – கம்ப்யூட்டரை ‘ஹேக்’ செய்து தகவல்களை மாற்றியது அம்பலம்

இந்நிலையில், ரோனா வில்சனின் கணிணி ஹேக் செய்யப்பட்டு, அதில் தவறான தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது எனும் கூற்று முற்றிலும் தவறானது என என்ஐஏ மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

பீமா கோரேகான் செயல்பாட்டாளர்களை விடுதலை செய்யுங்கள் – இந்தியாவிடம் ஐ.நா வலியுறுத்தல்

அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள கூடாது எனவும், அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ள என்ஐஏ, இந்த ஆதாரத்தைச் சமர்பித்த ரோனா வில்சனுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்துவின் செய்தி கூறியுள்ளது.

‘தலித் மக்களுக்கான ஆயுதப்படை’ உருவாக்க முயற்சி – என்ஐஏ குற்றச்சாட்டு

மேலும், இந்த வழக்கின் விசாரணையைத் தாமதப்படுத்தவே, ரோனா வில்சன் இது போன்ற மனுவைத் தாக்கல் செய்திருப்பதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்