Aran Sei

பீமாகோரேகான் வழக்கு – ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவுலாகா பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம்

பீமாகோரேகான் எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சோமா சென், ஆனந்த் டெல்டும்ப்டே, கவுதம் நவுலாகா, வெர்னான் கோன்சால்வ்ஸ் ஆகியோரின் பிணைமனுவை ரத்து செய்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணற்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு மருத்துவக் காரணங்களுக்காக பிணை கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

63 வயதான  கல்வியாளர் சோமா சென் தாக்கல் செய்திருந்த பிணைமனுவில் ஆஸ்டியோ ஆர்த்தரடிஸ், கிளக்கோமா மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வயதினைக் கருத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு எல்கர் பரிசத் வழக்கில்  குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சோமா சென் , அப்போதிலிருந்து  பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவும்  ஆஸ்துமா, குடல் பிரச்சினை, தோள்பட்டைப் பிரச்சினை ஆகியப் பிரச்சனைகளில் அவதி பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நால்வரின்  பிணை மனுவை விசாரித்த நீதிபதி டி.இ.கொத்தளிகர், மருத்துவக் காரணங்களுக்காக பிணை கோரிய  மனுவை நிராகரித்துள்ளார்.

இதேவேளையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரோணா வில்சனின் பிணை மனுவை வரும் செப்டம்பர் 3௦ வரை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளார்.

Source: THE HINDU 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்