குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் தொடர்பிருப்பதாக சமூக செயல்பாட்டாளரும், சிப்சாகர் சட்டமன்ற உறுப்பினருமான அகில் கோகாய் மீதான இரண்டாவது வழக்கைத் தள்ளுபடி செய்து தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதே குற்றச்சாட்டின் கீழ் பதியப்பட்டிருந்த முதல் வழக்கிலிருந்து அவர் ஜூன் 25 ஆம் தேதி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் விரைவில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பாக்கப்படுகிறது.
இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்
குடியுரிமைத் திருத்தச் சட்டங்களின்போது வன்முறையைத் தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அகில் கோகாய், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கிரிமினல் சதி, தேசத்துரோகம், மத, இன மற்றும் மொழிக் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுதல் மற்றும் பயங்கரவாத அமைப்புக்கு அதரவளித்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் அகில் கோகாய் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.
”அகில் கோகாய்யை குறிவைக்கும் அசாம் அரசு எடுத்த முயற்சிகளை நீதிமன்ற தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது. விரைவில் அவரை திறந்த வானத்தின் கீழ் பார்ப்போம் என்று நம்புகிறோம்” என அகில் கோகாய் தலைவராக இருக்கும் ரஜ்தோர் தள் அமைப்பின் செயல் தலைவர் பாஸ்கோ டி சைகியா கூறினார்.
கவுகாத்தி மற்றும் கிழக்கு அசாமின் ஜோர்ஹட்டில் உள்ள உறவினர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டிருக்கும் 84 வயது தாயாரை சந்திக்க அகில் கோகாய்க்கு கடந்த வாரம் இரண்டு நாட்கள் பெயில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.