Aran Sei

” 20 கோடி லஞ்சம், பாஜகவில் சேர்ந்தால் ஜாமீன் ” – கைது செய்யப்பட்ட அகில் கோகாயிடம் பேரம் பேசிய என்ஐஏ

தேசிய புலனாய்வு முகமை 20 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகவும், ஜாமீன் வேண்டுமானால் ஆர்.எஸ்.எஸ் அல்லது பாஜகவில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் மனித உரிமைகள் செயல்பாட்டாளர் அகில் கோகாய் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு 2019 ஆண்டு முதல் சிறையில் இருக்கும் கோகாய், அவரது சார்பாக ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தனக்கு அரசியல் பாடங்கள் நடத்திதனர் என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக இணையதள பயனர்களின் தகவல்கள் திருட்டு – ஆய்வில் வெளியாகி இருக்கும் தகவல்

”முதலில் எனக்கு இந்துத்துவா பற்றி கூறப்பட்டது, அதை நான் ஊக்குவித்தேன். பின்னர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தால், உடனடியாக ஜாமீன் கிடைக்கும் என்று கூறப்பட்டது. இந்த வாய்ப்பை மறுத்தபோது, பாஜகவில் சேர எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. காலியாக உள்ள சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு அசாம் பாஜக அரசில் நான் அமைச்சராகலாம் என அவர்கள் தெரிவித்தனர்” என அகில் கோகாய் கூறியுள்ளார்.

“நான் மறுத்ததால், என் மீது பல வழக்குகள் போடப்பட்டன, எனக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை. இப்போது நான் அனைத்து வாய்ப்புகளையும் இழந்துவிட்டதாக தெரிகிறது. என் குடும்பம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு விட்டது, நானும் உடல் ரீதியாக அழிக்கப்படுகிறேன்.” என அகில் கோகாய் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source : Hindustan Times

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்