Aran Sei

பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது – விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை

சீக்கியர்களுக்கான காலிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்க சதித்திட்டம் தீட்டியதாக, பஞ்சாப்பை சேர்ந்த ஒருவரைத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல், சைப்ரஸ் என்ற மத்திய கிழக்கு நாட்டில் வசித்து வந்த குர்ஜீத் சிங் நிஜ்ஜார், நேற்று முன் தினம் (டிசம்பர் 22), சைப்ரஸில் இருந்து டெல்லி வந்தபோது, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று தி இந்து தெரிவித்துள்ளது.

போராடும் விவசாயிகள் காலிஸ்தானியர்களா ? – பத்திரிகை ஆசிரியர் அமைப்பு கடும் கண்டனம்

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குர்ஜீத் சிங் நிஜ்ஜார் மீது பயங்கரவாத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிதான் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்  என்பது விசாரனையின் முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட குர்ஜீத் சிங் நிஜ்ஜார், ஹர்பால் சிங் மற்றும் மொயின் கான் ஆகியோர்  காலிஸ்தான் என்ற பெயரில் சீக்கியர்களுக்கான தனி நாட்டை உருவாக்குவதற்காக கிரிமினல் சதித்திட்டத்தை மேற்கொண்டனர் என்றும் இதற்காக சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வந்தனர் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்: அமித் மால்வியாவின் ஆதாரமற்ற அவதூறுகள்

மேலும், “இம்மூவரும் தங்கள் முகநூல் பக்கங்களில், போராளி ஜக்தார் சிங் ஹவாராவை (பஞ்சாபின் முன்னாள் முதல்வர் பீன்ட் சிங்கை படுகொலை செய்யததாக குற்றம் சாட்டப்பட்டவர்) புகழும் படங்களையும் வீடியோக்களையும், 1984 ஆம் ஆண்டில் நடந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்தப் பதிவுகளையும், தடைசெய்யப்பட்ட சர்வதேச பப்பர் கல்சா அமைப்போடு தொடர்புடைய காலிஸ்தானி ஆதரவு பதிவுகளையும் தொடர்ந்து பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் சீக்கிய இளைஞர்கள் உள்ளிட்ட பலரை காலிஸ்தான் இயக்கத்தை நோக்கி, இழுத்துள்ளனர்.” என்று அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

83 வயதான பழங்குடியினர் உரிமைப் போராளி ஸ்டேன் ஸ்வாமி – என்ஐஏவால் கைது

“2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை திகார் சிறையில் அடைக்கப்பட்ட  மொயின் கானுக்கு ஜக்தார் சிங் ஹவாராவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஜக்தார் சிங் ஹவாராவுக்கு வேலை செய்ய, மொயின் கான் விருப்பம் காட்டியுள்ளார். அவருடன் தனது தொடர்பு எண்ணை பகிர்ந்து கொண்டுள்ளார். பின்னர், மொயின் கான் தனது பேஸ்புக் கணக்கிலிருந்து காலிஸ்தானி ஜிந்தாபாத் காலிஸ்தான் என்ற பேஸ்புக் ஐடிக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார். இந்த பேஸ்புக் கணக்கில் இணைந்ததன் மூலம், மொயின் கானுக்கு, ஹர்பால் சிங் மற்றும் குர்ஜீத் சிங் நிஜ்ஜார் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.” என்று தேசிய புலனாய்வு அமைப்ப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுவதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மேலும், ”குற்றம் சாட்டப்பட்ட குர்ஜீத் சிங் நிஜ்ஜார், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் எதிராக நடக்கும் அட்டூழியங்கள் குறித்து, மொயின் கானுடன் தொடர்ந்து விவாதித்து வந்துள்ளார். இதன் வழியாக மொயின் கானை அவரின் தேவையின் பொருட்டு ஊக்கப்படுத்தியுள்ளார். தனி காலிஸ்தான் நாட்டை உருவாக்குவதற்கான பணியில் மொயின் கானை ஈடுபட செய்வதற்கு சம்மதிக்க வைத்துள்ளார். சதித்திட்டத்தின் தொடக்கமாக, 2018 ஆம் ஆண்டு, குர்ஜீத் சிங் நிஜ்ஜார் மொயின் கானுக்கு ஒரு துப்பாக்கியும் வெடிமருந்துகளை வாங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இவர்கள்? எதற்கு சிறையில் உள்ளார்கள்? என்ன குற்றம் செய்தார்கள்?

2019 ஆம் ஆண்டு மே மாதம், குற்றம் சாட்டப்பட்ட குர்ஜீத் சிங் நிஜ்ஜார், ஹர்பால் சிங், மொயின் கான் மற்றும் சுந்தர் லால் பராஷர் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்