விளிம்புநிலை பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே கொரோனா தொற்று அதிகரிப்பதால் அவர்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக மிகவும் விளிம்புநிலையில் உள்ள 75 பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஒன்றிய அமைச்சர்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “ஏற்கனவே வாழ்வாதாரத்திற்காக பழங்குடியினர் போராடிவரும் நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதிலிருந்து மீள்வதற்கு இயலாத நிலையில் உள்ளதாகவும், இது மனித சமூகத்திற்கும், பன்முகத்தன்மைக்கும் பெரும் இழப்பு” என்று கூறியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 1 லட்சத்திற்கும் குறைவானோர்களே உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள 104 மில்லியன் பழங்குடியின சமூகத்தில், 75 சமூகங்கள் மிகவும் விளிம்புநிலை பழங்குடியினச் சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்த வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தியது குறித்து மாதம் ஒருமுறை கொரோனா தொற்று முடியும் வரை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.