Aran Sei

கொரோனா தடுப்பூசிகளுக்கு நாடு முழுவது வேண்டும் ஒரே விலை – மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்த காங்கிரஸ்

கொரோனா தடுப்பூசிகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

மேலும், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் 50 விழுக்காட்டை மத்திய அரசிற்கு வழங்க வேண்டும். மீதமிருக்கும் 50 விழுக்காட்டை நேரடியாக மாநில அரசுகளுக்கும், வெளிச் சந்தைக்கும் விற்பனை  செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

“ஆக்கப்பூர்வமற்று வீராப்பாக பேசும் மோடி” – கொரோனா நடவடிக்கை குறித்து பிரஷாந்த் கிஷோர் விமர்சனம்

மத்திய அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், ப. சிதம்பரம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று காணொளி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

ஜெய்ராம் ரமேஷ் பேசும்போது, “ஒரே தேசம் ஒரே தேர்தல், ஒரே தேசம் ஒரே வரி என்பதில் ஆளும் பாஜக அரசு நம்பிக்கை வைத்துள்ளது. அதேபோலத் தடுப்பூசி விசயத்திலும் ஒரே தேசம் ஒரே விலை என்பதை அமல்படுத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

மத்திய அரசு மருந்து நிறுவனங்களிடமிருந்து 50 சதவீதத்தைக் கொள்முதல் செய்து, மீதம் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இது நியாயமற்றது, சமத்துவமில்லாதது. மாநில அரசுகளுக்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது. ஒரே தேசம் பல விலைகள் என்பதை ஏற்க முடியாது” எனத் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசையில் இந்தியா 142 வது இடம் – இந்துத்துவவாதிகளால் கேள்விக்குறியாகும் கருத்துரிமை என ஆய்வில் தகவல்

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களைவை உறுப்பினருமான ப.சிதம்பரம், “கரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்கிறது என்பதை முதலில் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மருந்துக் கொள்கையில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. இந்த மருந்துக் கொள்கையில் ஏற்கக்கூடிய விஷயம் இருந்தால் வரவேற்கிறோம். ஆனால், திருத்தப்பட்ட இந்தத் தடுப்பூசிக் கொள்கை என்பது, பிற்போக்குத்தனமாகவும், சமத்துவமற்றதாகவும் இருக்கிறது.” என கூறியுள்ளார்.

உலகில் எந்த நாடும், தடுப்பூசி திட்டத்தில் சந்தைக் காரணிகளைத் தீர்மானிக்க அனுமதிக்கவில்லை, விலை வைக்கவும் அனுமதிக்கவில்லை. திருத்தப்பட்ட தடுப்பூசிக் கொள்கையில், மருந்தைக் கொள்முதல் செய்தல், விலை, ஏழைகளுக்குத் தடுப்பூசி செலுத்துதல், 45 வயதுக்குக் கீழானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை மாநில அரசுகள் செய்ய வேண்டியது இருக்கும் என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ரெம்தேசிவிர் தடுப்பூசிகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி – மத்திய அரசு முடிவு

”தடுப்பூசி செலுத்தும் திட்டத்திலிருந்து நாட்டில் ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை மத்திய அரசின் கொள்கை காட்டுகிறது.” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

”மாநிலங்களுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி வருவாய்க் குறைவு, வரி வருமானம் பாதிப்பு, மானியங்கள், சமூக நலத் திட்டங்கள் எனப் பல செலவுகள் இருக்கும்போது தடுப்பூசிக்கான செலவு கூடுதல் சுமையை ஏற்றும். பிஎம் கேர்ஸ் அமைப்பை உருவாக்கிக் கோடிக்கணக்கில் பணம் பெற்றது என்ன ஆனது?”என சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்