Aran Sei

‘தடுப்பு மருந்து குறித்து பிரதமர் கூறிய உண்மைக்குப் புறம்பான தகவல்’ – தி இந்து ஆய்வில் அம்பலம்

ந்திய வரலாற்றில் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு இருந்தது என பிரதமர் மோடி பேசியிருப்பது வரலாற்று ரீதியில் தவறானது என தி இந்து நடத்திய உண்மை கண்டறியும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ”இந்திய தடுப்பூசி வரலாற்றை நீங்கள் பார்த்தால், சின்னம்மை, ஹெபடைடிஸ் பி அல்லது போலியோவிற்கான தடுப்பு மருந்து என எந்தத் தடுப்பு மருந்தாக இருந்தாலும், அதை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்கு இந்தியா பல தசாப்தங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. மற்ற நாடுகளில் தடுப்பூசி திட்டங்கள் முடிந்த போதும் கூட, இந்தியாவில் தொடங்கி இருக்காது” என தெரிவித்திருந்தார்.

உபா சட்டத்தில் சிறுவன் கைது – தன் இயலாமையால் குழந்தைகளிடம் ’வீரத்தைக்’ காட்டுகிறதா அரசு?

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு வரலாற்று ரீதியாக தவறான தகவல்களை கொண்டது என தி இந்து நடத்திய உண்மை கண்டறியும் சோதனையின் முடிவு கூறிகிறது.

சுதந்திரம் அடைவதற்கு முன்பே உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதில் பல சவால்கள் இருந்தாலும், அவை கிடைப்பதில் இருந்த பிரச்னைகள் குறைவு.

2012 ஆம் ஆண்டில் இந்திய தடுப்பூசி வரலாறுகுறித்து மருத்துவர் சந்திரகாந்த் வெளியிட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில், “1802 ஆம் ஆண்டில் எட்வர்ட் ஜென்னர் பசு அம்மை வைரஸ் தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான தனது பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட நான்கு ஆண்டுகளில் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் தடுப்பு மருந்து: ‘பிரதமரின் தாமதமான முடிவால் பல உயிர்களை இழந்துவிட்டோம்’ – மம்தா பானர்ஜி

1850 ஆம் ஆண்டுவரை சின்னம்மை தடுப்பூசிகள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் அதன் திரவ நிணநீர் கரைசலை பாதுகாப்பது சவாலாக இருந்தது.  இது  1895 ஆம் ஆண்டில் நிணநீர் விநியோகத்தை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சியில் இந்திய நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்க வழி வகுத்தன.

முதல் விலங்கு தடுப்பூசி உற்பத்தி கிடங்கு 1890 ஆம் அண்டு ஷில்லாங்கில் அமைக்கப்பட்டு, உற்பத்தி தொடங்கப்பட்டது.

1944 -45 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் அதிக சின்னம்மை பாதிப்புகள் பதிவாகின. இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்தவுடன் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு பாதிப்பு குறைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு சின்னம்மை தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா தன்னிறவை பெற்றிருந்தது.

‘தள்ளுவண்டி உணவு கடைகளை பார்சல் முறையில் செயல்பட அனுமதித்திடுக’ – தமிழக அரசுக்கு சோசலிச தொழிலாளர் மையம் கோரிக்கை

சின்னம்மை 1953 ஆம் ஆண்டு தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வழங்கப்பட்டது. இந்தியாவில் போலியோ தடுப்பூசியின் வரலாறு மிகவும் சிக்கலானது. “போலியோ ஆராய்ச்சி – தொற்றுநோய், தடுப்பூசி – போலியோ சொட்டு மருந்து மற்றும் போலியோ தடுப்பூசி ஆகியவற்றை தயாரிப்பதில்  இந்தியா முன்னோடியாக இருந்தது.

2014 ஆம் ஆண்டு தொடங்கபட்ட இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான தடுப்பூசி பாதுகாப்பு 60 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடாக அதிகரித்துள்ளது என பிரதமர் கூறினார். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களுக்கான சமீபத்திய தரவுகளின் படி,  எந்த மாநிலத்தில் 90 விழுக்காட்டை அடையவில்லை. டிசம்பர் 2020ல் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இமாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, கோவா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு 80 விழுக்காட்டை தாண்டியள்ளது. அதில் இமாச்சல பிரதேசத்தில் 89 விழுக்காட்டை அடைந்துள்ளது.

‘கொரோனா பணியிலுள்ள தலித் மருத்துவ அதிகாரிகள் மீதான தீண்டாமை அதிகரிப்பு’ – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

இந்தியாவின் தடுப்பூசிகளின் பெரும்பகுதியை உற்பத்தி செய்த பல பொதுத்துறை தடுப்பூசி ஆலைகள், பல்வேறு சந்தர்ப்பங்களில் மூடப்பட்டன, அல்லது அவற்றின் திறன்கள் குறைக்கப்பட்டன. இதனால், இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள், உலகளாவிய சப்ளையர்களாக மாறுவதற்கு வழிவகுத்துவிட்டன என்று தி இந்து வின் உண்மை அறியும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்