Aran Sei

8 லட்சம் மக்கள் வீதிகளில் அழுது கொண்டிருக்கும்போது : புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட முடியுமா?

credits : the indian express

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற கோரி டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரசு சட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதற்கு தயாராக இல்லை, விவசாயச் சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாக கூறியது.

விவசாய சங்க தலைவர்களுக்கும் அரசுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரும் இரு தரப்புக்கும் இடையே சுமூகமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் கடந்த 35 நாட்களாக டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

உரிமைக்கு போராடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா – பாஜகவிற்கு வலுக்கும் கண்டனம்

உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்க டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ”நாங்கள் கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை. மிகவும் கடினமான வருடம் முடிவுக்கு வந்துள்ளது” என கூறியுள்ளதாக தி இந்து பதிவிட்டுள்ளது.

32வது நாளை தொட்ட விவசாயிகள் போராட்டம் – 100வது விவசாயி ரயிலை துவக்கி வைத்த மோடி

டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப்பைச் சேர்ந்த 25 வயது இளைஞரான ஜெய்பால் சிங் ”இது (விவசாய போராட்டங்கள்) எல்லாம் முடிந்த பின்புதான் எங்கள் புத்தாண்டு தொடங்கும். மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றால்தான் எங்களால் கொண்டாட்டங்களில் ஈடுபட முடியும். குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டரீதியான உத்தரவாதத்தை அரசு உறுதியளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு : ’நேர்மையான நோக்கத்துடன் தீர்வு காண விரும்புகிறோம்’ – விவசாயிகள்

பஞ்சாப் பதிண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சுக்பிரீத் சிங் எனும் விவசாயி ”ஓவ்வொரு ஆண்டும் குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடுவோம். டிசம்பர் மாதத்தில் குடும்ப உறுப்பினர்களை சரியாகக்கூட பார்க்க முடியவில்லை. 8 லட்சம் மக்கள் வீதிகளில் அழுது கொண்டிருக்கும்போது எங்களால் எவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபட முடியும்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பீகார் மாநிலம் : ராஜ் பவனுக்கு அருகில் போராடிய விவசாயிகள் : தடியடி நடத்திய காவல்துறை

இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு, விவசாயச் சங்கங்கள் இடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்