புத்தாண்டை கொண்டாடுவதற்காக மக்கள் பயன்படுத்திய பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளால் நூற்றுக்கணக்கான பறவைகள் மடிந்து வீதிகளில் விழுந்துள்ளன.
இத்தாலியின் தலைநகரான ரோமில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் பட்டாசுகளை வெடித்தும் வான வேடிக்கைகளை கொளுத்தியும் கொண்டாடியுள்ளனர். இதையடுத்து நூற்றுக்கணக்கான பறவைகள் வீதிகளில் செத்து விழுந்துள்ளன.
ரோம் நகரின் முக்கிய ரயில்வே நிலையத்திற்கு அருகில், ஸ்டார்லிங் (ஐரோப்பிய பறவை இனம்) அதிக எண்ணிக்கையில் உயிரற்ற நிலையில் சாலைகளில் கிடக்கும் காணொலிகள் சமூக வலைதளங்களில் காணக்கிடைக்கின்றன.
இந்த நிகழ்வை ”படுகொலை” என விமர்சித்துள்ள விலங்குகள் நல அமைப்புகள், இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
பறவைகள் இறந்ததற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், விலங்குகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு, பறவை கூடுகள் அதிகமுள்ள பகுதிகளில் பட்டாசுகளை அதிக சத்தத்துடன் வெடித்ததற்கும் இதற்கும் தொடர்புள்ளதாக கூறியுள்ளனர்.
140 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு – இந்த ஆண்டின் மிக கோரமான விபத்து
சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் லொரேடானா டிக்லியோ ”அவை(பறவைகள்) பயத்தால் இறந்திருக்கலாம். அவை ஒன்றாக மேலே பறந்து ஒன்றோடு ஒன்று மோதியிருக்கலாம் அல்லது ஜன்னல்களில் மோதியிருக்கலாம் அல்லது மின்சார இணைப்புகளில் மோதியிருக்கலாம். அவை மாரடைப்பால் கூட இறந்திருக்ககூடும் என்பதை மறந்துவிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடித்து கொண்டாடுவதால் செல்லப்பிராணிகளுக்கும் விலங்குகளுக்கும் துன்பமும் காயமும் ஏற்படுத்துவதாக கூறியுள்ள அவர், பட்டாசு வெடித்து கொண்டாடுவதற்கு ரோம் நகரம் தடை விதித்துள்ள போதும், அது மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.