Aran Sei

நீதிபதிகளை அரசுகள் இழிவுபடுத்தும் போக்கு துரதிருஷ்டவசமானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை

image credit : thehindu.com

நீதிமன்ற உத்தரவுகள் அரசுக்கு விருப்பமானதாக இல்லாவிட்டால் நீதிபதிகளை அரசுகள் அவதூறு செய்யும் புதிய போக்கு உருவாகியுள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கை விசாரிக்க கோரி மனு – விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

“நீங்கள் (அரசுகள்) நீதிமன்றத்துடன் சண்டையிட்டாலும் பரவாயில்லை. ஆனால், அவமதிக்க முயற்சி செய்யாதீர்கள். உச்சநீதிமன்றத்திலும் இந்த நடைமுறையைப் பார்க்கிறேன். இது ஒரு புதிய போக்கு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து சத்தீஸ்கர் அரசு மற்றும் சமூக ஆர்வலர் ஒருவர் சார்பில் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன.

ஹிஜாப்: அவசர வழக்காக விசாரிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி அடங்கிய அமர்வு, இந்த வழக்கிற்கு அப்பால் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் நீதித்துறைக்கு எதிராகக் கூறப்படும் “குற்றச்சாட்டுகள்” குறித்து அதிருப்தி அடைந்ததாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

“முன்னர் மக்களிடம் தான் நீதிபதிகளை அவமதிக்கும் போக்கு இருந்து வந்தது. தற்போது அரசுகளும் இதை மேற்கொள்கின்றன. நீங்கள் (அரசு தரப்பு வழக்கறிஞர்) மூத்த ஆலோசகர், எங்களை விட அதிகம் பார்த்திருப்பீர்கள். நீதிபதிகளை அரசுகள் அவமதிக்கும் புதிய போக்கு உருவாகியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது” என்று நீதிபதி என்.வி. ரமணா கூறியுள்ளார்.

பட்டினிச்சாவு குறித்து தவறான தகவல் அளித்த ஒன்றிய அரசு – அறிக்கை தயார் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

“ஊடகங்கள் மற்றும் உங்கள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாங்கள் இந்த வகையான பழிவாங்கலை அனுமதிக்க முடியாது,” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கம், அதன் வாதத்தை உறுதிப்படுத்தும் வகையிலான ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தவறிவிட்டது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Source: PTI

இந்திய நாடாளுமன்றத்தில் உளறி கொட்டிய ஒ.பி.எஸ்ஸின் மகன் ஒ.பி.ரவிந்தர நாத், கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்