Aran Sei

சட்ட விதிகளுக்குப் புறம்பாக புதிய டாஸ்மாக் கடை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

ர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகில் உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து  ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

அம்மனுவில் “கோபிநாதம்பட்டி கூட்ரோடு கிராமம் சேலம் – அரூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் வெங்கடேஸ்வரா எரிபொருள் நிலையத்திற்கு நேர் எதிரே உள்ள சுடுகாட்டுப் பாதை வழியாகச் செல்லும் பகுதியில் உள்ள நிலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  இக்கடை அமைக்கப்பட போவதாகச் சொல்லப்படும் பகுதிக்கு அருகாமையிலேயே எம்ஜிஆர் காலத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட சலவை மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கான குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. டாஸ்மாக்குக்கு அருகிலேயே 45 மீட்டர் உள்ளேயே காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம்உள்ளது. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 390 மீட்டர் உள்ளேயே அமைந்திருக்கிறது”  என்று தெரிவிக்கபட்டுள்ளது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்த குழந்தைகள்: விபத்தை வெளிகொணர்ந்த மருத்துவரை குற்றாவாளிகள் பட்டியலில் இணைத்த யோகி அரசு

கோபிநாதம்பட்டி கூட்ரோடு ரேஷன் கடை வழியாகச் செல்லும் பாதையும் அதே பாதையில் ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகளுக்கான அரசுப் பள்ளி குடியிருப்புப் பகுதிகள் அமைந்திருப்பவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் அமைய இருக்கும் இடம்

டாஸ்மார்க் கடை அமைக்கும் பட்சத்தில், கோயிலிலிருந்து 100 மீட்டர் தொலைவிலும், நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் கடை அமைக்கப்பட வேண்டும் என்ற விதியும் மீறப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு  பகுதியைச் சேர்ந்த பிரபு அரண்செய்- யிடம் பேசினார், “தற்போது 179A தேசிய நெடுஞ்சாலைக்கான நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலை முழுவதும் பயன்பாட்டுக்கு வரும்பொழுது இதன் போக்குவரத்து மிகவும் அதிகரித்து காணப்படும். அவ்வாறான சூழலில் நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையிலேயே உள்ள கடைக்குப் பெருமளவில் வெளியூர் நபர்கள் வரும்போது, பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலவிதமான ஆபத்தை எதிர்கொள்ள நேரும்” என்று தெரிவித்தார்.

ஆன்லைன் கருத்தரங்கிற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும் – பல்கலைகழகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளியுறவு அமைச்சகம் புதிய கட்டுப்பாடு

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் அமைந்திருந்த டாஸ்மார்க் கடை மூடப்பட்ட நிலையில் மீண்டும் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டால் இப்பகுதி இயல்பு நிலை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தெரிவித்த பிரபு, மதுவினால் சாதி பிரச்சினை ஏற்பட்டு பெரும் பிரச்சினையாகியது என்றும் கூறினார்.

ஆளுங்கட்சியை சேர்ந்த சம்பத் டாஸ்மாக் வருவதற்கு துணையிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வின் வழியாக மக்களின் குறை கேட்கும் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று தர்மபுரிக்கு சென்றுள்ளார். அவரிடமும் ஊர் மக்கள் மனு அளித்துள்ளதாகக் கோபிநாதம்பட்டி கூட்ரோடு கிராமத்தைச் சேர்ந்த பிரபு அரண்செய்-யிடம் தெரிவித்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்