Aran Sei

கொரோனா – மே 6 முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகள் : தமிழக அரசு அறிவிப்பு

மிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே  விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து ,   தற்போது  மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் மே 6-ம் தேதி காலை 4 மணி முதல் மே 20-ம் தேதி காலை 4 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹரித்வார் கும்பமேளாவில் ஒரே நாளில் 13 லட்சம் பேர் நீராடல் : காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அரசு மற்றும் தனியார் அலுவகங்கள் அதிகபட்சமாக 50% பணியாளர்களுடன் இயங்கவும், பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், பேருந்துகள், டாக்ஸியில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து செல்லவும் மட்டுமே அனுமதியளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுவதாகவும், தேநீர் கடைகள் நண்பகல் 12 வரை மட்டுமே இயங்க அனுமதியளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மீண்டும் ஊரடங்கிற்கு தயாராகிறதா தமிழகம் – ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்

ஏற்கனவே, இறப்பு சார்ந்த சடங்குகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 20 பேர்க்கு மேல் அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளது.

மேலும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் எனவும் , ஏற்கனவே அறிவித்தவாறு சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகள், மீன் கடைகள் இயங்க அனுமதியில்லை என்றும் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்