Aran Sei

மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் சட்டங்கள் – தொழிலாளர் அமைச்சகம் தகவல்

ற்போது நடைபெற்று வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர்,  29 தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு, நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளை(code) அமல்படுத்தப்படுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு ’தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் 2020’ எனும் சட்டத்தைக் கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதற்கு செப்டம்பர் 28-ம் தேதி குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்தது. ‘தொழிலாளர் சீர்திருத்தச் சட்டம் 2020’ என்று கூறப்பட்ட நான்கு குறியீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள்: சீர்த்திருத்தமா? சீர்கேடா? – விரிவான அலசல்

இந்நிலையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், “ நான்கு குறியீடுகளின் கீழ்  ஊதியம், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள், தொழில்துறை உறவுகள், சமூக பாதுகாப்பு – போன்றவற்றை குறித்து குறியீடுகளை வெளியிடத் தயாராக உள்ளன. இருப்பினும், இவை செயலாக்கத்துக்கு வருவது தேர்தல்களுக்குப் பிறகுதான்.” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“குறியீடுகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. இப்பட்டியலில் உழைப்பு என்பது ஒரு பொருளாக கருதப்படுவதால், மாநிலங்களும் தங்களது விதிகளை இதில் வகுக்க முடியும்.” என்று மற்றொரு அதிகாரி கூறியுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் : ஷியாம் சுந்தர்

இத்தேர்தல்களுக்குப் பின்னர் குறியீடுகள் வெளியிடப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் அபூர்வா சந்திரா,  “எந்தக் கருத்தும் கூற விருப்பமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்பு அமைச்சகம் விதிகளுடன் தயாராக இருக்கும் என்று சந்திரா முன்னர் கூறியிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்