Aran Sei

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுக்கும் லைவ்லா – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கேரளா நீதிமன்றம் தடை

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021பகுதி IIIஐ பின்பற்றாததற்கு, சட்ட செய்திகள் மற்றும் செய்தி இணையதளமான லைவ் லா  மீடியா பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதற்கு கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் செய்தி ஊடகங்கள், ஓடிடி தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் விதிகளை எதிர்த்து லைவ்லா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய அரசுக்குக் கேரளா உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தாவிற்கு எண்ணற்ற காயங்கள்: மக்களின் சக்தியை பாஜக பார்க்கும் – திரிணாமுல் எம்.பி.கருத்து

வழக்கு விசாரணையின்போது, விதிகளைப் பின்பற்ற மார்ச் 24 ஆம் தேதிவரை அவகாசம் இருப்பதாக, மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லைவ்லா தனது மனுவில், ”மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின் 3 வது பிரிவு, புகார்களைத் தீர்த்துக்கொள்ள மூன்று அடுக்குப் பாதுகாப்பு அமைப்பொன்றை வெளியீட்டாளர்களை ஏற்பாடு செய்ய வலியுறுத்துகிறது. இது,  அரசியலமைப்பிற்கு முரணானதாகும். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீதான இந்த நிர்வாக ஒழுங்கு விதி, எங்களைப் போன்ற சிறிய அல்லது நடுத்தர வெளியீட்டாளர்களுக்குச் சாத்தியமற்றதாக இருக்கும். இந்த விதிகள் எங்களைப் போன்ற நிறுவனங்கள்மீது ஒரு கடுமையான சுமையை ஏற்படுத்தும்” என தி இந்து கூறியுள்ளது.

கடவுளை ‘அல்லாஹ்’ என அனைத்து மதத்தினரும் அழைக்கலாம்: மலேசியா உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மேற்பார்வைக் குழு (விதி 14-ன் கீழ் அமைக்கப்பட்ட துறைகளுக்கிடையிலான குழு) மூலம் ஒரு குறைதீர்ப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது மிதமிஞ்சிய ஒழுங்குமுறைக்கு ஒப்பாகும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், “ஒவ்வொரு சமூக ஊடகமும், அதன் தளத்தில் தகவல்களின் மூலத்தை கண்டுபிடிக்கச் செய்யும் விதி 4(2) ஐ.டி. சட்டத்தின் பிரிவு வலியுறுத்துகிறது. இது இந்திய தண்டனை சட்டம், பிரிவு 19(1)(a) (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்) மீறுகிறது. மேலும், ஐடி சட்டத்தின் 79-வது பிரிவின் கீழ் சமூக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளை மறுக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக, தி இந்து  கூறியுள்ளது.

மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவம்: இந்த நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் – பாஜக தலைவர்

வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி.ஆஷா அடங்கிய தனிநபர் அமர்வு, ”டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குமுறையை கையாளும் விதிகள் பகுதி 3ன் கீழ் லைவ் லா இணையதளத்துக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாக, லைவ்லா தெரிவித்துள்ளது.

”மனுதாரர் சட்ட அறிக்கைகள் மற்றும் சட்ட ஆவணங்களை வெளியிடுபவர் என்பதால், தகவல் தொழிற்நுட்பத் துறை விதிகளின் பகுதி 3-ல் உள்ள விதிகளைப் பின்பற்றாததற்காக மனுதாரர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாக, லைவ்லா செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்