கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த காப்பீடு திட்டம் வரும் ஏப்ரல் 24 அன்றோடு காலாவதியாவதை அடுத்து, அதன் பிறகு புதிய காப்பீடு திட்டம் நடைமுறைக்கு வருமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்களப்பணியாளர்கள் தாக்கப்படுவதில் இந்தியா முதலிடம் – மருத்துவப்பணியாளர் கூட்டமைப்பு தகவல்
கடந்த மார்ச் 2020 அன்று, பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் மத்திய அரசு முன்களப்பணியாளர்களுக்கு காப்பீடு திட்டத்தை அறிவித்திருந்தது. இந்நிலையில் மூன்று முறை நீட்டிக்கப்பட்டு தற்போது ஏப்ரல் 24 அன்றோடு காலாவதியாகவுள்ள நிலையில், இப்புதிய காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
@PMOIndia @drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @DDNewslive @airnewsalerts @COVIDNewsByMIB @CovidIndiaSeva @ICMRDELHI @mygovindia
— Ministry of Health (@MoHFW_INDIA) April 18, 2021
கொரோனா தொற்றுப் பணியில் ஈடுபடும் முன்களப்பணியாளர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தால், அவர்களின் குடும்ப நலனுக்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் வழியாக ரூ.50 லட்சம் முன்களப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு காப்பீடாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை 287 பேருக்குக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்களப்பணியாளர்களுக்கு மனஊக்கம் அளிக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதாகச் சுகாதாரத் துறை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.