Aran Sei

போக்சோ சட்டத்திற்கு புதிய விளக்கமளித்த நீதிபதி: மீண்டும் சர்ச்சையில் மும்பை உயர்நீதி மன்றம்

பாதிக்கப்பட்ட மைனரின் கையைக் குற்றம் சாட்டப்பட்டவர் பிடித்ததற்காகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததாலோ சம்மந்தப்பட்ட நபரைப் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும், போக்சோ (Protection of Children from Sexual Offences) சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனடிவாலா தெரிவித்துள்ளார்.

ஐந்து வயது சிறுமியைப்  பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு  தண்டனை பெற்ற 50 வயதான லிப்னஸ் குஜூர் என்பவர் கீழவை  நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில்  நீதிபதி புஷ்பா கணேடிவாலா இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

போக்சோ சட்டம் குறித்து மும்பை நீதிமன்றம் வினோத விளக்கம் – தண்டனை பெற்றவர் விடுதலை

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு கீழவை நீதிமன்ற விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட லிப்னஸ் குஜூர் மீது போக்சோ சட்டம் பிரிவு 8 இன் கீழ் 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்தார். வழக்கை விசாரித்து  நீதிபதி புஷ்பா குற்றம் சட்டப்பட்டவரின் மீது பாலியல் சீண்டல் தொடர்பான குற்றத்தை நிரூபிக்க இந்த வழக்கில் முகாந்திரம் இல்லையெனத் தெரிவித்துள்ளார்.

’நீங்கள் ஆர்எஸ்எஸ்காரரா? ஆளுநராகவோ துணைவேந்தராகவோ எந்தப் பதவிக்கும் போகலாம்.’ – ராகுல் காந்தி விமர்சனம்

அதோடு பாதிக்கப்பட்ட மைனரின் கையைக் குற்றம் சாட்டப்பட்டவர் பிடித்ததற்காகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததாலோ சம்மந்தப்பட்ட நபரைத் தண்டிக்க முடியாத என்றும் அவர் தெரிவித்துள்ளார்

குற்றம் சட்டப்பட்டவரை கீழவை நீதிமன்றம் கொடுத்திருந்த போக்சோ சட்டம் 8 மற்றும் 10வது பிரிவிலிருந்து விலக்கியதோடு, அதே சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் நீதிமன்றம் தண்டித்துள்ளது. அதோடு சம்மந்தப்பட்ட நபர்மீது வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தார் என்கிற வழக்கு மட்டுமே பதிய முகாந்திரம் இருப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.

ஜெயலலிதா நினைவிடம் – ‘முதல்வர் பழனிசாமி ஜமுக்காளத்தில் வடிகட்டி அண்ட புளுகைப் புளுகுகிறார்’ – திமுக கண்டனம்

முன்னர், போக்சோ சட்டத்தின் அடிப்படையில் ஒரு குழந்தையை வெறுமனே தொடுவதை, பாலியல் தாக்குதல் என்று கூறுமுடியாது என்றும் மாறாக, பாலியல் உள்நோக்கத்துடன், தோலோடு தோல் உரசினால் மட்டுமே, அவ்வாறு கருத முடியும் என்று நீதிபதி புஷ்பா கனடிவாலா தீர்ப்பளித்திருந்தார். அவர் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே தலைமையிலான அமர்வுத் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.

 

எண்டிடிவி யில் வெளியான செய்தியின் சுருக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்