Aran Sei

டெல்லி: போலீஸ் காவலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முகமது ஜூபைர் மனுத் தாக்கல்

Image Credits: India TV News

ரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு 4 நாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதை  எதிர்த்து இன்று (ஜூன் 30) டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆல்ட் நியூஸ் என்ற செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும் இணையதளத்தின் இணை நிறுவனரும் பத்திரிகையாளருமான முகம்மது சுபேர், டெல்லி காவல்துறையினரால் கடந்த ஜூன் 27 ஆம் தேதி கைது செய்யப்பட்டு  1 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது – எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கண்டனம்

முகமது ஜூபைருக்கு மேலும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறையினர் அவகாசம் கோரினர். இதனையடுத்து 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,  போலீஸ் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, முகமது ஜுபைரின் ட்விட்டர் பதிவு இந்து உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கலவரத்தைத் தூண்டுவதாகவும் ட்விட்டர் பயனரின் புகாரின் பேரில் 2018 இல் கைது செய்யப்பட்டதாகக்  டெல்லி காவல்துறை கூறியுள்ளது. அவர்மீது பிரிவுகள் 153 (கலவரத்தைத் தூண்டுதல்) மற்றும் 295 (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டது) கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனித உரிமை செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட், பத்திரிகையாளர் ஜூபைர் கைது – நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரேசா கண்டனம்

உண்மையில், ஜுபைரின் ட்விட்டர் பதிவின் புகைப்படம், ஹிருஷிகேஷ் முகர்ஜி இயக்கிய 1983 ஆம் ஆண்டு வெளியான ’‘கிஸ்ஸி சே நா கெஹ்னா(ssi Se Na Kehna)’ என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் காட்சியில் இருந்து எடுக்கப்பட்டது.  தணிக்கை வாரியத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்டு பின்னர் இந்தியா முழுவதும் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டுல பாஜக செல்வாக்கு இவ்வளவு தான்1 ADMK Issue | Annamalai | Thirumavalavan

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்