Aran Sei

டெல்லி: வங்கதேச சுற்றுலாப் பயணிகளை ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் என்று குற்றம் சாட்டும் காணொளிகளை பகிர்ந்த பாஜக தலைவர்கள்

டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள மசூதியிலிருந்து வெளியே வரும் நபர்களுடன் நேர்காணல் மேற்கொண்ட ஒரு நபரின் காணொளி வைரலாகியுள்ளது. இந்த காணொளியில் ஷாஹீன் பாக் பகுதியில் வசிப்பவர்கள் வங்கதேச இஸ்லாமியர்கள் என்றும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் என்று கூறுகிறார்.

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஷாஹீன் பாக் பகுதியில் வசிக்கும் வங்கதேச மக்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் தண்ணீரை கிடைப்பதாக ‘வர்த்மான் பாரத்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் அந்த காணொளியில் குற்றம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த காணொளியில் பேசும் பெரும்பாலான நபர்கள் இந்திய தூதரகம் சார்ந்த பணிகளுக்காக இங்கு வந்துள்ளதாகவும், மீண்டும் விரைவில் வங்கதேசத்திற்கு திரும்பி சென்று விடுவோம் என்று தெரிவிக்கின்றனர்.

நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா

இந்த காணொளியை பகிர்ந்துள்ள டெல்லி பாஜகவின் முக்கிய தலைவரான அஸ்வினி உபாத்யாய், “இவர்கள் ‘வங்கதேச ரோஹிங்கியா ஊடுருவல் காரர்கள்’ என்றும் இவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும், அவர்கள் 10-20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த காணொளி லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

இந்த காணொளியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பாஜக டெல்லி செய்தித் தொடர்பாளர் சரிகா ஜெயின், “இந்து சகோதரர்களே, உங்கள் டெல்லி ஒரு நாள் உங்கள் கைகளிலிருந்து எப்படி விலகிச் செல்லும் என்று பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா இஸ்லாமியர்களை நாடு கடத்திய வங்கதேசம் – மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆனால் அந்த காணொளியில் பேசுபவர்கள் யாரும் தங்களை ரோஹிங்கியாக்கள் என்று கூறவில்லை. இதில் பேசும் பெரும்பாலோர் தூதரக விசா விண்ணப்பங்களுக்காக இங்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் ஆம் ஆத்மி அரசிடமிருந்து இலவச குடிநீர் மற்றும் மின்சாரம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை வங்கதேச சுற்றுலாப் பயணிகள் மறுத்துள்ளனர்.

மே 7 ஆம் தேதி வெளியான இந்த காணொளி இதுவரை 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

Source : The Wire

பிரியாணி தடை திமுக ஆட்சியை முடக்கும் சதி | Sangathamizhan Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்