Aran Sei

டெல்லி: முகமது சுபைரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

ரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது சுபைர் ஒரு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததாகவும் டெல்லி காவல்துறையினரால் கடந்த ஜூன் 27 அன்று கைது செய்யப்பட்டார்.

முகமது சுபைரின் வழக்கறிஞர் அவருக்கு பிணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பிணை வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. பின்னர் காவல்துறையின் போலீஸ் காவலுக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு முகமது சுபைரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுபுர் சர்மாவின் பேச்சை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது: மத உணர்வை புண்படுத்தியதாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு

2014 முன் ஹனிமூன் ஹோட்டல்; 2014 பின் ஹனுமான் ஹோட்டல் என்று முகமது சுபைரின் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டதால் அனுமன் பக்தர் பாலாஜிகிஜைன் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சிறுபான்மையினரை தாக்கி மதக்கலவரத்தை தூண்டவே அக்னிபத் திட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார் – எம்.பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான படங்கள் மற்றும் வார்த்தைகளைக் கொண்ட முகமது ஜுபைரின் இந்தப் பதிவு மற்றும் வேண்டுமென்றே பதிவிடப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டுவதற்கு போதுமானதாக இருக்கிறது. இது பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும்” என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Source: ndtv

Justice Loya வழக்கில் Amit shah சிறை செல்வது உறுதி | Piyush Manush

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்