Aran Sei

டெல்லி: ஹிஜாப் அணிந்ததால் வகுப்புக்குள் அனுமதி மறுக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு மாணவி

டெல்லியில் உள்ள முஸ்தபாபாத்தில் 6 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்ததற்காக வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கபடவில்லை .

பிப்ரவரி 21 அன்று டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துக்மிர்பூரில் உள்ள மேல்நிலை பெண்கள் பள்ளியில் பாத்திமா* (பெயர் மாற்றப்பட்டுள்ளது), என்ற மாணவி 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிகள் மூடப்பட்டதால் இணையவழி கல்வியில் படித்து வந்த மாணவி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்துள்ளார்‌. ஆனால் ஹிஜாப் அணிந்து வந்ததால் அவரை வகுப்பறைக்குள் நுழைய மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பீகார்: பசுக்காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமிய இளைஞன்

வகுப்பறையை விட்டு வெளியேற்றப்பட்டு என் ஹிஜாப் பை கழற்ற சொன்னதாக அந்த மாணவி பேசும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் ஹிஜாப் அணிந்ததற்காக 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகா மற்றும் இப்போது இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் இதேபோன்ற பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

இதுகுறித்து தி வயர் செய்தி நிறுவனத்திடம் பாத்திமாவின் தந்தை முகமது அய்யூப் பேசியுள்ளார். அதில் “பிப்ரவரி 21ஆம் தேதி எனது 10 வயது மகள் பள்ளி வகுப்பில் கலந்து கொள்ளச் சென்றிருக்கிறாள். வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அவள் ஹிஜாபை கழட்ட சொல்லியுள்ளார். மேலும் சக மாணவர்கள் முன்பு அவளை கேலி செய்து அவமானப்படுத்தியுள்ளதாகவும் பாத்திமாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

“டெல்லி அரசு அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியாக உடை அணிய வேண்டும் என்று சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அதனைத்தான் நாங்கள் பின்பற்றுவதாக வரும் பள்ளியின் முதல்வர் என்னிடம் கூறினார். நான் அவர்களிடம் அது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காட்டுங்கள் அல்லது கேமாராவின் முன் இந்த விளக்கத்தை சொல்லுங்கள் என்று கூறினேன். அப்போது அந்த ​​அறையில் இருந்த 4 பெண் ஆசிரியர்கள் என் தொலைபேசியைப் பிடுங்கி கொண்டதாக” பாத்திமாவின் தந்தை அய்யூப் தெரிவித்துள்ளார்‌

“மேலும் பள்ளி சீருடை பற்றிய அதிகாரபூர்வ உத்தரவு இல்லை என்றாலும், சில மாணவிகளை பள்ளியில் உள்ள மற்ற மாணவிகளிடமிருந்து “வேறுபடுத்தி” பார்க்க அனுமதிக்க முடியாது” என்று பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளதாக அய்யூப் தெரிவித்துள்ளார்.

அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்

பள்ளி ​​முதல்வர் சுசீலா தேவியை தி வயர் செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அதில் அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை என்று அவர் மறுத்தார். இந்தியா முழுவதும் ஹிஜாப் பிரச்சினை எழுவதற்கு முன்பே இந்த பள்ளியில் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பே மாணவிகள் தங்களது ஹிஜாப் பை கழட்டி வைக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளதாக பள்ளி முதல்வர் சுசீலா தேவி தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசினால் நடத்தப்படும் பள்ளியில் படித்த முஸ்தபாபாத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவி, ஒருவர் தி வயர் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார். அதில் தனது ஹிஜாபை அகற்றும்படி பள்ளியில் இதுவரை யாரும் தன்னிடம் ஒருபோதும் கேட்டதில்லை என்று கூறினார்.

“கர்நாடகாவை போன்ற ஒரு சூழலை இங்கு உருவாக்குகிறார்கள். இது கர்நாடகா இல்லை என்று அந்த ஆசிரியரிடம் கூட சொன்னேன், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. என்று அய்யூப் கூறியுள்ளார்

முஸ்தபாபாத் சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி யூனுஸ், அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து கேட்டபோது, ​​இதுபோன்ற சம்பவங்கள் வெளிவருவது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் – கடந்து வந்த பாதையும் பேசிய அவதூறுகளும்

இந்த சம்பவம் குறித்த புகார் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதில் ஆசிரியர் மீது தவறு உறுதிப்படுத்தப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று முஸ்தபாபாத் சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி யூனுஸ் கூறியுள்ளார்.

ஹிஜாப் அணிந்ததற்காக மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைய மறுக்கப்பட்ட இதேபோன்ற இரண்டு நிகழ்வுகள் வடகிழக்கு டெல்லியில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கர்நாடகாவின் உடுப்பியில் 6 இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்காக வகுப்பறைக்குள் நுழைய மறுக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இதே பிரச்சினை அரங்கேறி வருகிறது‌. ஹிஜாப் தடை சம்பந்தமான வழக்கு தற்போது கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

Source: the wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்