Aran Sei

`பசுக்களைப் பாதுகாக்க கோமாதா வரி’ – மத்திய பிரதேச பாஜக அரசின் அடுத்த திட்டம்

த்தியப் பிரதேச மாநில பாஜக அரசு, பசுக்களின் நலனுக்காக நிதி திரட்டும் விதமாகப் புது வரியை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று (நவம்பர் 22) தெரிவித்துள்ளார்.

அகர் மால்வாவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சவுகான், “பசுக்களின் நலனுக்காகவும் பசுக்களின் கொட்டகைகளின் பராமரிப்பிற்காகவும் பணம் திரட்டுவதற்குச் சிறிய வரிகளை விதிக்க நான் யோசித்திருக்கிறேன். இது சரியா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளதாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

`பசுக்களுக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும்’ – மத்தியப் பிரதேசம்

மேலும், ”நாம் நம் வீடுகளில் செய்த முதல் ரொட்டியைப் பசுக்களுக்கு உணவாக அளிப்போம். அதேபோல், கடைசி ரோட்டியை நாய்களுக்குத் தருவோம். நம் இந்திய கலாச்சாரத்தில் விலங்குகள் மீதான அக்கறை இப்போது குறைந்து வருகிறது. எனவே பசுக்களுக்காகப் பொதுமக்களிடமிருந்து சிறிய வரியை வசூலிக்க நாங்கள் யோசித்து வருகிறோம்.” என்று கூறியுள்ளார்.

மாநிலத்தில் பசு பண்ணைகளை நடத்துவதற்காக ஒரு பிரத்யேகச் சட்டம் இயற்றப்படும் என்று சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார் என்று ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்

இதுகுறித்து, இன்று (நவம்பர் 23), மாநில அமைச்சர் நரொட்டம் மிஷ்ரா பேசும்போது, “இதைப் பசு வரி என்று அழைப்பது தவறு. இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்கள்  பசுக்களின் நலனைப் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த உணர்வை நிலைநிறுத்துவதற்கான ஒரு நடவடிக்கை இது.” என்று கூறியுள்ளதாக ‘ஏஎன்ஐ’ செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, முதல்வர் இணைய வழியில் புதிதாகத் தொடங்கப்பட்ட பசுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியுள்ளார். அப்போது, பசுக்களை அடிப்படையாக வைத்துப் பொருளாதாரத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 18 ஆம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக ‘பசு’  அமைச்சகம் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.

மாட்டுச் சாண சிப் குறித்த ஆய்வு முடிவுகள் எங்கே? அறிவியலாளர்கள் கேள்வி

கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, வருவாய், விவசாயிகள் நலத்துறை போன்றவை இந்த அமைச்சகத்தில் சேர்க்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்