Aran Sei

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் – அமித் ஷா

கர்நாடகா மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமித் ஷா, இன்று அங்கு பல்வேறு வேளாண் திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், “ஆட்சிக்கு வந்தநாள் முதல் நரேந்திர மோடி அரசு வேளாண் குடிமக்களின் வருவாயை இருமடங்காக உயர்த்துவது என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி செயல்படுகிறது. அந்த வரிசையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பலமடங்கு உயர்த்த உதவும். இதன் மூலம் விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானால் விற்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அதானி -யின் கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மேலும், “காங்கிரஸ் கட்சியினர் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தேவையில்லாமல் விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

போராட்டத்திற்கு தூண்டிவிடுபவர்களிடம் தான் ஒரு கேள்வி கேட்க விரும்புவதாக தெரிவித்த அமித் ஷா, “விவசாயிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் உங்கள் ஆட்சியில் ஏன் விவசாயிகளுக்கு ரூ.6000 மானியம் அளிகவில்லை. அதேபோல், எத்தனால் கொள்கையை ஏன் மறு பரிசீலனை செய்யவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“சேரிகளின் குடியரசுத் தலைவர்” – உகாண்டா அரசியலை உலுக்கிய பாபி வைன்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின்போது பல்வேறு காரணங்களால் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துனர். மேலும் குடியரசு தினத்தில் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் பேரணிக்கு எதிரான மத்திய அரசின் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : PTA

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்