Aran Sei

இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும் –  சீரம் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி அதார் பூனாவாலா தகவல்

ந்திய மக்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தி முடிக்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதான் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து எங்களால் முடிந்த வரை உழைத்து வருகிறோம். அதைத் தொடருவோம். தொற்றுநோயைத் தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டுபூசிகளை ஏற்றுமதி செய்வதற்கான அரசு மற்றும் தடுப்பூசி நிறுவனங்களின் முடிவின் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள அவர், ஒரு விசயத்தில் எந்த ஒரு முடிவிற்கு வருவதற்கு முன்னர் அதில் இருக்கும் சில காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

”இந்தியாவில் தடுப்பூசி செலுத்து பணி தொடங்கியபோது, தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தது. இதனை வைத்து இந்தியா கொரோனாவை வென்றுவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதினர். அதே நேரத்தில் உலகின் பல நாடுகள், கடும்  நெருக்கடியில் இருந்தன. அவர்களுக்குத் தங்களால் ஆன உதவிகளை வழங்க இந்தியா முன்வந்தது” என தெரிவித்துள்ளார்.

‘எங்களுக்கு ஷைலஜா டீச்சர் வேண்டும்’ – கேரளத்தின் புதிய அமைச்சரவையில் ஷைலஜாவிற்கு இடமில்லாதது குறித்து பார்வதி

”இந்தத் தொற்று நோய் புவியியல் மற்றும் அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. உலகில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்துக்கொள்ளாத வரை நாம் பாதுகாப்பாக இருக்க முடியாது. கொரோனா தொற்றை வெல்வதற்கான உலகளாவிய கூட்டணியின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன்மூலம், உலகில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியர்களைப் புறக்கணித்துவிட்டு நாங்கள் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவில்லை.” என கூறியுள்ளார்.

”இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமிருக்கும் நாட்டில், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி விட முடியாது. அதில் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் நிறைந்துள்ளன. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தி முடிப்பதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள்வரை ஆகும்” என தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்