Aran Sei

அனைத்து மதங்களும் அமைதியாக வாழும் இந்தியாவைத்தான் நேதாஜி கனவு கண்டார் – நேதாஜி மகள் கருத்து

னைத்து மதங்களும் அமைதியாக வாழும் இந்தியாவைத்தான் எனது தந்தை கனவு கண்டார்” என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகள்அனிதா போஸ் பாஃப் கூறியுள்ளார்.
வரும் ஜனவரி 23 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், அந்நாள் ‘பராக்கிரம தினம்’ ஆக இனி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என்று ஒன்றிய கலாசாரத்துறை அறிவித்துள்ளது.
இதனையொட்டி ஒன்றிய கலாசாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இணைய நிகழ்வில் அனிதா போஸ் பாஃப்  பேசியுள்ளார். “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்தார், தொடர்ந்து வாழ்கிறார், என்றும் இந்தியர்களின் இதயங்களில் வாழ்வார், நேதாஜி பாலின சமத்துவத்தை விரும்பினார், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகளை வழங்கும் ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதே அவர் நோக்கமாக இருந்தது என்று ஜெர்மனியில் இருந்து பேசிய அனிதா போஸ் பாஃப் அதில் தெரிவித்துள்ளார்.
Source : The Hindu
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்