Aran Sei

நேபாளில் பாபா ராம்தேவின் கோரோனில் மருந்தை விநியோகிக்கத் தடை – ஆயுர்வேதம் மற்றும் மாற்றுமருத்துவத்துறை அறிவிப்பு

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அன்பளிப்பாக வழங்கிய கோரோனில் மருந்து நேபாள நாட்டில் விநியோகிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாக அந்நாட்டு ஆயுர்வேதம் மற்றும் மாற்றுமருத்துவத்துறை அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அலோபதி குறித்து தவறான கருத்திட்டதாக மருத்துவர்கள் புகார் – பாபா ராம்தேவ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மேலும், இதற்கு முன்னர்,நேபாள் அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், “கோரோனில் மருந்து பெட்டகத்தில் உள்ளடக்கிய மாத்திரைகள் மற்றும் சுவாச எண்ணெய் ஆகியவை கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முறையான மருந்துகள் இல்லை” என்று கூறியிருந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 1500 கோரோனில் மருந்து பெட்டகம் கொள்முதல் செய்யப்பட்டதில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றுக்கூறி அந்நாட்டு ஆயுர்வேதம் மற்றும் மாற்றுமருத்துவத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தவறான தகவல்களைக் கூறி மக்களைக் குழப்புகிறார் பாபா ராம்தேவ்’ – இந்திய மருத்துவ சங்கத்தினர் காவல்நிலையத்தில் புகார்

 

இதற்கு முன், கோரோனில் மருந்தை பூட்டான் அரசால் அந்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாபாராம்தேவின் கோரோனில் மருந்து கொரோனாவைக் குணப்படுத்தும் என்று ” போலியான, தவறான தகவல்களைப் பரப்பி பாபா ராம்தேவ் குழப்பம் விளைவிக்க முயல்கிறார். இது சட்டப்படி குற்றம்” என்று இந்திய மருத்துவ சங்கத்தினர் குற்றச்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்